உருகும் நினைவு - கவிதை!!

 


கனத்த இருளில் 

கவிந்தது நிலவு...

உருகிக் கொண்டிருக்கிறது 

உயிர்ப்பூ...

அதீத நேசத்தின்

அற்புத உறவொன்று

அணைந்து கொண்டிருக்கிறது

மெழுகென..

எங்கள் கண்ணாடிகளில்

எரி விம்பங்கள் தான்

இப்போதும்...

நீதியின் தராசுகள்

சரிந்துபோன அவலம்...

காந்தீய திரை கிழித்த

கனத்த சாட்சியே,

வறண்டு போன 

உன் தேகத்துணிக்கைகளில்

வேள்வியின் யாகம்

உருக்கொண்டதே..

அக்கினிக் குஞ்சின்

அடை காத்தலில்

சூரியப் பறவைகள்

சுட்டெரிக்கலாம்

நாளை.....

கோபிகை 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.