பொதுமக்களிடம் பொலிஸார் அவசர வேண்டுகோள்!!

 


போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண , பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி பேருவளை கடற்பரப்பில் புலனாய்வுப் பிரிவினர், கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 288 கிலோகிராம் 644 கிராம் ஹெரோய்னுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த தொகை போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு உதவியதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இலக்கம் 128/09, நிஸங்கசலா மாவத்தை, தலாஹேன, மாலபே அல்லது இலக்கம் 522/1/2 சல்மல் மாவத்தை, உடுமுல்ல, பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பொபி மாலி எனப்படும் ‘களுத்துறை சமிந்த தாப்ரோவ்’ என்ற 41 வயது நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர.

அத்துடன் சந்தேகநபர் 198017101618 அல்லது 801711618V எனும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.