பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த விக்ரம்பிரபு!!!


 மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் கடல், ராவணன் போன்ற ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்ததையடுத்து ஒரு கட்டத்திற்கு பிறகு மணிரத்னத்தின் மீது இருந்த வரவேற்பு குறைந்தது.

அதன் பிறகு பல சர்ச்சைகளுக்கு ஆளான மணிரத்தினம் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தின் மூலம் மல்டி ஸ்டார் அனைவரையும் இணைந்து நடிக்க வைத்து மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதன் பிறகு மீண்டும் மணிரத்னத்தின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது.

தற்போது பல வருடங்களாக பொன்னியின் செல்வன் என்றும் நாவலை வைத்து படத்தை எடுக்க மணிரத்தினம் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது தற்போது தான் கை கூடியுள்ளது. தற்போது இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற கதாநாயகர்களை வைத்து படத்தை பாதி முடித்துள்ளார்.

இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்திலும், கார்த்திக் வந்தியதேவன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தற்போது இவர்களது வரிசையில் விக்ரம் பிரபு பார்த்திபன் என்ற பல்லவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ரம் பிரபு சிறப்பாக நடித்திருப்பதாகவும் படம் வெளியானால் விக்ரம் பிரபு மீது அனைவரது கவனமும் திரும்பும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது விக்ரம் பிரபு தொடர்ந்து வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தற்போது பல இயக்குனர்களும் பல கதாபாத்திரங்களை வைத்து விக்ரம் பிரபுவிடம் கதையைக் கூறி வருகின்றனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.