பிரபல சீரியலிலிருந்து விலக்கப்பட்ட நடிகை!

 


சன் டிவியில் பலவிதமான கதைகளை கொண்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அதில் ‘கண்ணான கண்ணே’ சீரியல் மக்கள் மத்தியில் அதிக ரசிகர்களை ஏற்படுத்தி வைத்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை ப்ரியா பிரின்ஸ் திடீரென்று விலகிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

கண்ணான கண்ணே சீரியலில் அப்பா கதாபாத்திரமாக நடிகர் பப்லு நடித்து வருகிறார். மேகனா என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ப்ரியா பிரின்ஸ் நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த சீரியலில் கதாநாயகியாக நிமிஷிகாவும் கதாநாயகனாக ராகுல் ரவியும் நடித்து வருகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை வகிக்கும் கண்ணாலே கண்ணே சீரியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடிகை பிரியா பிரின்ஸ் திடீரென்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘தான் இந்த நாடகத்தை விட்டு விலகி விட்டதாகவும், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்றும் சக நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் நடப்பது அனைத்தும் நன்மைக்குத்தான்’ என்றும் கூறியுள்ளார். இச்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.