ஐ.எஸ் அமைப்புடன் ரிஷாட்டின் சட்டத்தரணிக்கு தொடர்பா!!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஷ்புல்லாஹ்வுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்துடன் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து அவர் பணம் பெற்றமை குறித்து விசாரணையும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை பேசாமலிருப்பது ஏன் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை