சந்திரயான் -2, 9 ஆயிரம் முறை நிலவினைச் சுற்றிவந்தது!

 


சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனையொட்டி இஸ்ரோவின் பயிலரங்கம் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இரு ஆண்டுகளில் சந்திரயான் விண்கலம் 2 செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றிவந்துள்ளது.

இதில் எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி வருகின்றன. நிலவில் நீர், கனிமம், உள்ளிட்டவை தொடர்பான முக்கிய தகவல்களை சந்திரயான் 2 செயற்கைக் கோள் அனுப்பியுள்ளது.

அவை பிரமிக்க வைப்பதாக உள்ளன. இந்த அறிவியில் தகவல்கள் இஸ்ரோ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.