இலங்கைக்கு நேரடி சேவைகளை ஆரம்பிக்கும் 07 விமான நிறுவனங்கள்!!
நாளை முதல் 07 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடனான நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. அதற்கமைய, இந்த 07 விமான நிறுவனங்களில் 05 நிறுவனங்களின் விமானங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் நேரடி சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
அவற்றில் ரஷ்யாவின் இரண்டு விமான நிறுவனங்களாகிய AEROFOLT மற்றும் AZUR AIR ஆகியன நாளை முதல் நேரடி விமான சேவைகளை நடத்தவுள்ளன.
அத்துடன் இத்தாலியின் NEOS விமான நிறுவனம், பிரான்ஸின் AIRFRANCE நிறுவனம், பங்களாதேஸின் US BANGLA AIRLINES நிறுவனம் என்பனவும் நாளை முதல் இலங்கைக்கான நேரடி விமானங்களை இயக்கவுள்ளன.
அதேவேளை, இஸ்ரேலின் ARKIA விமான நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் SWISSAIR நிறுவனமும் இலங்கைக்கான நேரடி விமான சேவகைளை ஆரம்பிக்க விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan
கருத்துகள் இல்லை