ஸ்ரீகாந்த், சிருஷ்டிடாங்கே நடித்துள்ள 'குருட்டாம் போக்கு'!!

 


வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி, ‛தி ஜர்னி ஆப் பெட்' என்ற தமிழ் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்க, சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி புகழ் பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


படம் குறித்து மணிபாரதி கூறியதாவது: இது சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள ஒரு வீக் எண்ட் மூவி. ஒரு விஷயத்தை குருட்டாம்போக்கில் அணுகினால், அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம். சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறைந்த ஆடை அணிந்து, கடுங்குளிரில் நடுங்கியபடியே சிருஷ்டி டாங்கே நடித்து கொடுத்தார் எனவும் அவர் கூறினார்.





#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.