நாளை முதல் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி!!

 


நாளை முதல் 12 வயதிற்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளை முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தலசீமியா உள்ளிட்ட ஏனைய நோய்களுக்குள்ளான சிறுவர்களுக்கு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை பைஷர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் , நாடளாவிய ரீதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஏனைய வைத்தியசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.