பெண்ணை தேடிச்சென்ற பொலிஸ் அதிகாரி பணி நிறுத்தம்!!
இரவுவேளையில் பெண்ணை தேடிச்சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பிரதேசவாசிகளால் கட்டிவைக்கப்பட்ட நிலையில் அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகரின் பணியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரின் து இளம் மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது,
இந்நிலையில் அண்மையில் இரவுவேளையில் குறித்த அதிகாரி அப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த பொலிஸ் அதிகாரி திருமணமாகாவர் என கூறப்படும் நிலையில், கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை