வல்வெட்டித்துறை கத்திக் குத்து சம்பவம்- குற்றவாளி ஒருவர் கைது!!


யாழ்ப்பாணம் வல்வெட்டியில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்து தலைமறைவான உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மற்றைய சந்தேகபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு இடம்பெற்றது. சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிந்தவராவார்.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து கொலையில் ஈடுபட்டவர்களாக உறவினர்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் திருகோணமலை பொலிஸ் பிரிவில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

தற்போதைய கொவிட்-19 நிலமை காரணமாக அங்கு சென்று சந்தேக நபரைக் கைது செய்ய முடியாத நிலையில் திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலளிக்கப்பட்டது. இதனியடுத்து திருகோணமலை பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.