நீதி மறுக்கப்பட்ட கிருசாந்தியின் 25வது நினைவேந்தல்!


 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன.


அந்த மாணவி அந்த வாரம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணிநேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.அந்த மாணவியின் பெயர் கிருசாந்தி குமாரசுவாமி, யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. அன்று காலை தாயார் அவசர அவசரமாக உணவு தயாரித்துக் கொடுத்தார். பாடசாலைக்குச் செல்லும் அவசரத்தில் அவள் முழுமையாக அதனை உண்ணவில்லை. அதன் பின்னர் சிறிது நேரம் படித்துவிட்டு, காலை 7.15 மணிக்கு அவள் தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். மகளின் சைக்கிள் மறையும் வரை தாயார் பார்த்துக்கொண்டிருந்தார்.


கிருசாந்தியின் தாயாரின் பெயர், ராசம்மா குமாரசுவாமி, 59 வயது, இந்திய பல்கலைக்கழக பட்டதாரி, அவர்கள் வசிக்கும் கைதடியில் உள்ள பாடசாலையொன்றில் அவர் துணை அதிபராக பணிபுரிந்தார், மூத்த மகள் பிரசாந்தி கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிரிசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார், ராசாம்மா 1984 இல் தனது கணவரை இழந்தவர், அவரது வாழ்க்கை என்பது பிள்ளைகளை மையப்படுத்தியதாக காணப்பட்டது.


மகள் பாடசாலை சென்ற பின்னர் ராசம்மா, கோவிலிற்கு சென்றார், சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும். சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார்.


தனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார். அவர் தனது சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை தெரிவிக்க, அவரும் கவலையடையத் தொடங்கினார். இருவரும் வீட்டு வாசலில் வந்துபார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் மனதில் பல கவலைகள் சூழ்ந்துகொண்டன.


அந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து அவர்கள் கேள்விப்பட விரும்பதா அந்த செய்தியை தெரிவித்தார், கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும், நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்.


ஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை.


மறுநாள் காலை கிருசாந்தி குடும்பத்தின் இரு உறவினர்கள், யாழ்ப்பாண தலைமை தபாலதிபராக இருந்த கோடிஸ்வரனை நாடினர். நிலைமையை புரிந்துகொணட அவர் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு செல்லவேண்டும் எனத் தீர்மானித்தார். கோடீஸ்வரனும் வேறு இருவரும் புங்கங்குளம் இராணுவமுகாமிற்குச் சென்றனர். கிருசாந்தியும் குடும்பத்தினரும் காணமற்போயுள்ளதை அறிவித்தனர். கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இது இடம்பெற்றது.


கிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர். ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர். தபாலதிபரின் உறவினர் ஒருவர் கிருசாந்தியின் சகோதரனின் சைக்கிள் ‘செயின் கவர்’ ஒன்றை செம்மணி இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கடையொன்றில் கண்டிருந்தார். இது குறித்தும் அவர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.


இவர்கள் காணமற்போன வேளை யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. யாழ். குடாநாடு மிகநெருக்கமான சோதனைச் சாவடிகளையும், காவலரண்களையும் கொண்டிருந்தது. ஒரு மாதத்திற்கு மேல் படையினர் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர் என்பது மர்மமாக காணப்பட்டது.


இலங்கையின் தேசிய பத்திரிகைகள் இந்தச் சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை. தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை படையினரிற்கு எதிராக எழுதுவது என்பது தேசப்பற்றற்ற செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.


யாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். பூபாலன் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இது குறித்து தெரிவித்தார். இது குறித்து அறிந்ததும் சந்திரிகா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.


ஜனாதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளிற்காக லெப். கேர்ணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றது. கிருசாந்தி காணாமற்போன தினத்தன்று செம்மணி காவலரணில் பணியாற்றியவர்கள் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டிருந்தனர்.


எனினும், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.


அவர்கள் தாங்கள் கிருசாந்தியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை ஏற்றுக்கொண்டனர். கிருசாந்தியையும் ஏனையவர்களையும் கொலைசெய்ததையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கிருசாந்தி காணமற்போய் 45 நாட்களிற்கு பின்னர் உள்ளூர் நீதவான் ஒருவர் முன்னிலையில் செம்மணி புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன. கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்ட காவலரணிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து அவ்வேளை அங்கு பணியாற்றிய அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.


திரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து சட்டமா அதிபர் மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிமால் திசநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினி அபயரட்ண ஆகியவர்கள் அடங்கிய டிரையல் அட்பார் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், ஆதாரங்கள் வெளியாவதை தடுப்பதற்காக அவர்கள் ஏனைய மூவரையும் கொலைசெய்ததும் தெரியவந்தது. இலங்கை படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வந்துள்ளனர்.


ஏழு மாதங்கள் நீடித்த குழப்பம் மிகுந்த விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஐந்து படையினர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்தனர். அவ்வேளை சில அரசியல்வாதிகள் இது அரசாங்கத்தின் மனித உரிமை கொள்கைக்கு, சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும், ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் இது சாத்தியமாகியிராது என்பதே உண்மை.


இதேவேளை, கிருசாந்தி படுகொலைக்கு ஆறு மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குமாரபுரம் படுகொலைகள் உரிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கவில்லை. செம்மணி படுகொலை இரண்டு வருடங்களில் முடிவடைந்த அதேவேளை, குமாரபுரம் படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு 20 வருடங்கள் பிடித்தது. இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவுபடுத்துகின்றது.


———–


கிருசாந்தி குமாரசாமி- செம்மணி படுகொலை


1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு விசேட காரணங்கள் இருந்தன. அந்த மாணவி அந்த வாரம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணிநேரங்களில் அவள் இரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.


அந்த மாணவியின் பெயர் கிருசாந்தி குமாரசுவாமி, யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. அன்று காலை தாயார் அவசர அவசரமாக உணவு தயாரித்துக் கொடுத்தார். பாடசாலைக்குச் செல்லும் அவசரத்தில் அவள் முழுமையாக அதனை உண்ணவில்லை. அதன் பின்னர் சிறிது நேரம் படித்துவிட்டு, காலை 7.15 மணிக்கு அவள் தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். மகளின் சைக்கிள் மறையும் வரை தாயார் பார்த்துக்கொண்டிருந்தார். கிருசாந்தியின் தாயாரின் பெயர், ராசம்மா குமாரசுவாமி, 59 வயது, இந்திய பல்கலைக்கழக பட்டதாரி, அவர்கள் வசிக்கும் கைதடியில் உள்ள பாடசாலையொன்றில் அவர் துணை அதிபராக பணிபுரிந்தார், மூத்த மகள் பிரசாந்தி கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிரிசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார்,


ராசாம்மா 1984 இல் தனது கணவரை இழந்தவர், அவரது வாழ்க்கை என்பது பிள்ளைகளை மையப்படுத்தியதாக காணப்பட்டது. மகள் பாடசாலை சென்ற பின்னர் ராசம்மா, கோவிலிற்கு சென்றார், சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும்.


சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார். தனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத்தொடங்கினார். வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்துகொண்டே இருந்தார். அவர் தனது சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை தெரிவிக்க, அவரும் கவலையடையத் தொடங்கினார்.


இருவரும் வீட்டு வாசலில் வந்துபார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் மனதில் பல கவலைகள் சூழ்ந்துகொண்டன. அந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து அவர்கள் கேள்விப்பட விரும்பதா அந்த செய்தியை தெரிவித்தார், கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும், நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச்செல்ல தீர்மானித்தார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக்கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்


. ஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடுதிரும்பவில்லை. மறுநாள் காலை கிருசாந்தி குடும்பத்தின் இரு உறவினர்கள், யாழ்ப்பாண தலைமை தபாலதிபராக இருந்த கோடிஸ்வரனை நாடினர். நிலைமையை புரிந்துகொணட அவர் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு செல்லவேண்டும் எனத் தீர்மானித்தார். கோடீஸ்வரனும் வேறு இருவரும் புங்கங்குளம் இராணுவமுகாமிற்குச் சென்றனர். கிருசாந்தியும் குடும்பத்தினரும் காணமற்போயுள்ளதை அறிவித்தனர். கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இது இடம்பெற்றது. கிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர்.


ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர். தபாலதிபரின் உறவினர் ஒருவர் கிருசாந்தியின் சகோதரனின் சைக்கிள் ‘செயின் கவர்’ ஒன்றை செம்மணி இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கடையொன்றில் கண்டிருந்தார். இது குறித்தும் அவர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவர்கள் காணமற்போன வேளை யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. யாழ். குடாநாடு மிகநெருக்கமான சோதனைச் சாவடிகளையும், காவலரண்களையும் கொண்டிருந்தது. ஒரு மாதத்திற்கு மேல் படையினர் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர் என்பது மர்மமாக காணப்பட்டது. இலங்கையின் தேசிய பத்திரிகைகள் இந்தச் சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை. தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை படையினரிற்கு எதிராக எழுதுவது என்பது தேசப்பற்றற்ற செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.


யாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். பூபாலன் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இது குறித்து தெரிவித்தார். இது குறித்து அறிந்ததும் சந்திரிகா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளிற்காக லெப். கேர்ணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றது.


கிருசாந்தி காணாமற்போன தினத்தன்று செம்மணி காவலரணில் பணியாற்றியவர்கள் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர். அவர்கள் தாங்கள் கிருசாந்தியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை ஏற்றுக்கொண்டனர். கிருசாந்தியையும் ஏனையவர்களையும் கொலைசெய்ததையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கிருசாந்தி காணமற்போய் 45 நாட்களிற்கு பின்னர் உள்ளூர் நீதவான் ஒருவர் முன்னிலையில் செம்மணி புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன.


கிருசாந்தி தடுத்துவைக்கப்பட்ட காவலரணிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவ்வேளை அங்கு பணியாற்றிய அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். திரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து சட்டமா அதிபர் மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிமால் திசநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினி அபயரட்ண ஆகியவர்கள் அடங்கிய டிரையல் அட்பார் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.


மேலும், ஆதாரங்கள் வெளியாவதை தடுப்பதற்காக அவர்கள் ஏனைய மூவரையும் கொலைசெய்ததும் தெரியவந்தது. இலங்கை படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வந்துள்ளனர். ஏழு மாதங்கள் நீடித்த குழப்பம் மிகுந்த விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஐந்து படையினர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளிகள் என்பதை கண்டுபிடித்தனர். அவ்வேளை சில அரசியல்வாதிகள் இது அரசாங்கத்தின் மனித உரிமை கொள்கைக்கு, சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும், ஜனாதிபதியாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கா அவர்கள் தலையிட்டிருக்காவிட்டால் இது சாத்தியமாகியிராது என்பதே உண்மை. இதேவேளை, கிருசாந்தி படுகொலைக்கு ஆறு மாதங்களிற்கு முன்னர் இடம்பெற்ற குமாரபுரம் படுகொலைகள் உரிய முக்கியத்துவத்தை பெற்றிருக்கவில்லை. செம்மணி படுகொலை இரண்டு வருடங்களில் முடிவடைந்த அதேவேளை, குமாரபுரம் படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு 20 வருடங்கள் பிடித்தது.


இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவுபடுத்துகின்றது. இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. வடக்கு மாகாண சபை கொண்டு வந்த தீர்மானமும், ஐ.நா நிலவரங்களும் அதனைக் கிளறிவிட்டிருக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது. இதனால் உண்மைகள் மறைக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டோரிற்கான நீதி, நியாயங்கள் முற்றாக மறுக்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், ஊடகங்களும் பல்வேறு வடிவிலான ஆவணப்படுத்தல்களை இந்த விடயம் தொடர்பில் தயாரித்து வைத்திருக்கின்றன. ஆனால் அவை தமிழ் இன அழிப்பின் இறுதிக் கட்டத்தில் சேமிக்கப்பட்டவை. இந்த இன அழிப்புக்கு திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருப்பதையும், பல்வேறு காலகட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு அல்லது இன சிதைப்பு மேற்கொள்ளப்பட்டதென்பதையும் அந்தத் தரவுத் தேட்டங்கள் காணத்தவறியிருக்கின்றன.


ஓர் இன அழிப்பின் முதல் இலக்கு ஆண்கள் என்றால், அதன் இரண்டாம் இலக்கு பெண்கள் தான். ஆயிரம் ஆண்களைக் கொன்று வீசுவதால் எழும் அதிர்வைவிட, ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக் கிழித்துப்போடுதல் பேரதிர்வை ஏற்படுத்தும். இன அழிப்புக்குள்ளாக்கும் மக்களின் உளவியலை மோசமாக மிரட்சியடையச் செய்யும். கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை அதனை அவதானித்திருக்கிறோம். அனுபவித்திருக்கிறோம். அதில் முக்கிய இனவழிப்பு ஆவணமாக யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தியின் படுகொலையும், அதற்குப் பின்னரான செம்மணி புதைகுழியும் பதிவுசெய்யப்படல் வேண்டும். செம்மணி ஓர் இனத்தின் மீது நடத்தப்பட்ட கூட்டு இனப்படுகொலையின் அடையாளம். ஆனால் அது விரைவாகவே மறக்கப்பட்டாயிற்று. இங்கு பிரயோகமாகும், தாமதிக்கப்படும் நீதி வழங்கலானது, அநீதிக்கு சமமானதாக மாறிவிடுகின்றது. தமிழர்கள் மனங்களிலிருந்து என்றும் அகலாத படுகொலை நினைவுகளுக்குள் செம்மணியும் உள்வாங்கப்படல் வேண்டும்.


600க்கும் மேற்பட்ட தமிழ் உயிர்கள் புதைக்கப்பட்ட அந்த வெளி ஒரு படுகொலையில் காட்சிப் படிமமாக நிறுவப்பட்டால் அது தெற்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரும் சுற்றுலாவிகளுக்கு நம் இனத்துயர் செய்தியை அறிவிக்கும். இதில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். வெறுமனே இனப்படுகொலை நடக்கின்றது என்பதை ஒரு சம்பவக் குறிப்பாக மட்டும், ஒரு வரியில் குறிப்பிட்டுத் தீர்மானம் வெளியிடல் போதாமைகளைக் கொண்டதாகக் கணிக்கப்படும். இங்கு நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க ஆதாரபூர்வமாக, சம்பவக் கோர்வையாக அவற்றை தொகுத்து வெளியிடவேண்டும். உலகளவில் அநீதிக்குள்ளான இனங்கள் அதனையே செய்திருக்கின்றன. அவ்வாறு செய்தலே அது ஆரோக்கியமுள்ள அரசியல் பயணமாக அமையும். உள்ளே யாழ்ப்பாணம் வரவேற்கின்றது, இப்போது புதிய வடிவம் பெற்றுவிட்டது. ஒருவித அபிவிருத்தியின் மெருகூட்டலுடன் அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது.


ஈழத்தமிழர் மறந்துபோன வரலாற்றுப் பக்கங்களில் முக்கிய இரு சம்பவங்களை இந்த மையம் வைத்திருக்கிறது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பரில் இந்த இடத்தில்தான் கிருசாந்தி தொலைக்கப்பட்டாள். 2000 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட படையியல் நடவடிக்கை இந்த வளைவு வரை விரிந்திருந்தது. இந்த இரு சம்பவங்களும் தமிழர்களால் மறக்கப்பட முடியாதவைதான். ஆனால் மறதியின் அரசியல் அனைத்தையும் மூடச் செய்திருக்கின்றது. விரும்பியோ, விரும்பாமலோ மறந்துபோவதை விரும்புகின்றோம். அப்படியான காலத்தில்தான் கிருசாந்தியை மறதியின் அடுக்குகளிலிருந்து மீண்டும் கிளறியெடுக்க வேண்டியிருக்கின்றது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி ஒரு விபத்து நடந்தது. சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த மாணவியொருவரை இராணுவ வாகனம் மோதிக்கொன்றது. இராணுவத்துக்கு எதிராக மூச்சுக்கூட விடுவதற்கான சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் மாணவிகள் அமைதியாக சாவு வீட்டைக் கடைபிடித்தனர்.


வெள்ளைச் சீருடைகளுக்கு தனியான மரியாதையுண்டு என்ற பொது மதிப்பீட்டின் அடிப்படையில் தனியாகவும், சேர்ந்தும், தம் லேடீஸ் சைக்கிள்களில் நாவற்குழியிருக்கும் அந்த செத்த வீட்டிற்கு சென்றுவந்தனர். அந்த நம்பிக்கையை கையில் பிடித்துக்கொண்டு தன் சைக்கிளில் இறுதிச் சடங்கிற்குப் போன கிருசாந்தி தனியே வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். வெட்டைக்காற்று பேயென அடித்துக்கொண்டிருந்தது. எப்போதாவது கடக்கும் வாகனங்கள் அவளைக் கடந்துபோய்க்கொண்டிருந்தன சிலர் அவளை அவதானித்துமிருந்தனர். Chemmani5அவர்கள் அவதானித்தவேளையில் இராணுவத்தினர் அவளை “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுக்கு அருகில் நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் அவளுக்கு என்ன நடந்தது என்ற விடயம் ஆறு வாரங்கள் கழித்து வந்த பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தியாக வெளிவந்தது. செய்தி “அச்சமயம் அங்குள்ள கொட்டகை ஒன்றுக்குள் இருந்த கோப்ரல்ஒருவர் மாணவியை உள்ளே கொண்டுவருமாறுகட்டளையிட்டதை அடுத்து சோதணைக் கடமையில் ஈடுபட்டிருந்தபடையினர் மாணவியை உள்ளே கொண்டு சென்றனர். மகள் பாடசாலையிலிருந்து திரும்பாததால் தாயாரும், தம்பியாரும் அவளைத் தேடிப் புறப்பட்டனர். அவர்களும் அதே சோதணைமுகாமை அமைந்தனர். அங்கு ஒரு மணித்தியாலம் வரைகாத்திருந்தனர்.


அவர்களும் வீடு திரும்பாததையிட்டு அயலவர் ஒருவரும் அந்தச் சோதணை முகாமுக்கு தேடிச் சென்றனர். ஏற்கனே வீடு திரும்பாத மூவர் குறித்து சம்பந்தப்பட்ட அயலவர் விசாரித்தபோது அவரும் உள்ளே கூட்டிச் செல்லப்பட்டார். அவர்கள் இராணுவத்தினரின் தங்கும் அறையின் பின்புறத்தில்கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டநிலையில் வைக்கப்பட்டனர். மாணவி கிருசாந்தி வேறிடத்தில் வைக்கப்பட்டிருந்தாள். பின்னர் இரவு பத்து மணியளவில் கிருசாந்தி தவிர்ந்த மூவரும் கழுத்தியில்கயிற்றால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் ஒரு குழியிலும், மற்றொருவர் இன்னொரு குழியிலுமாக புதைக்கப்பட்டனர். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மாணவி கிருசாந்தியைபதினொரு பேர் வன்புணர்வு செய்து கொலை செய்தனர்” உதயன் (27.10.1996) 1996 ஆம் ஆண்டு கிருசாந்தியின் படுகொலை யாழ்ப்பாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இலங்கை நாடாளுமன்றத்திலும், சர்வதேச அரங்குகளிலும் முக்கிய பேசுபொருளாக இந்தவிடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது. தம் மீது விழுந்த குற்றச்சாட்ட போக்குவதற்கு உடனடி விசாரணையை இராணுவத்தரப்பு ஆரம்பித்திருந்தது. அதன் விளைவாக ஏழு இராணுவத்தினரும், இரண்டு பொலிசாரும் கைதுசெய்யப்பட்டனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அளித்த வாக்குமூலம் கீழே பதிவிடப்படுகின்றது.


வாக்குமூலம் 1996 ஆம் ஆண்டு அரியாலை துண்டிப் பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் சிவில் நிர்வாகப் பகுதியில் கட்டளை அதிகாரியான கப்டன் லலித் ஹோவுக்கு கீழ் பணிபுரிந்தேன். அரியாலை, துண்டுப் பகுதியில் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்கள் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணியை மேற்கொண்டிருந்த சமயம் புலனாய்வுப் பிரிவு வேலையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. புலனாய்வுப் பிரிவு வேலைகளுக்கு கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன ஆகியோர் உட்பட சில வீரர்கள் இந்தப் பிரிவில் இருந்தனர். அவர்களின் கீழ் நான் செயற்பட்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில் அரியாலைப் பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை இராணுவத்தினர் நடத்தனர். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த சகலரையும் வெளியே அழைத்து வந்து நெடுங்குளம் எனும் இடத்தில் ஒன்றுசேர்த்து விசாரித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் இங்கு மேஜர் வீரக்கொடி, மேஜர் குணசேகர ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். அவர்கள் முகமூடி அணிந்த இருவரை அழைத்து வந்து அங்கு நின்ற பொதுமக்கள் முன்நிறுத்தினர்.


அந்த இரு முகமூடி நபர்களும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனத் தெரிவித்து ஐம்பது பேரை அடையாளம் காட்டினார்கள். அங்கு ஐம்பது பேரும் வீடியோ படம் எடுக்கப்பட்டதுடன் எம்மிடமிருந்த பெயர் பட்டியலுடன் அவர்களின் பெயர் விபரங்கள் ஒப்பிட்டும் பார்க்கப்பட்டன. பின்னர் அவர்களின் வீட்டு முகவரிகள் பெறப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். விடுதலைப் புலிச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அந்த முகவரியின் படி முயற்சிகள் எடுக்கப்பட்டன. அரியாலைப் பகுதியில் மக்கள் எவ்வாறு கைதுசெய்யப்பட்டார்கள்? எவ்வாறு கொல்லப்பட்டார்கள்? எங்கு புதைக்கப்பட்டார்கள்? என்ற விவரங்களை என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். chemmani6அரியாலைப் பகுதியில் முதலில் கைதானவார்கள் தபால்கட்டுச் சந்தியில் 7 ஆவது காலாட் படையணிப் பிரிவில் தடுத்து வைக்கப்படிருந்தனர். கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா தலைமையில் இயங்கிய “சி” பிரிவிலும், அரியாலையில் உள்ள கட்டடத்திலும் பலர் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். மற்றொரு தடுப்பு முகாம் தபால்கட்டை சந்தியில் இருந்து செல்லும் பாதையில் பாடசாலைக்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் அமைத்த முன்னைய அலுவலகத்தில் இயங்கியது.


கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் செல்வரத்தினம் என்பவரைக் கைது செய்து “சி” பிரிவு முகாமில் தடுத்து வைத்திருந்தனர். அவரைக் கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தன, லெப்டினன்ட், துடுகல்ல ஆகிய மூவரும் சேர்ந்து கைதுசெய்தனர். அவரை விடுவிக்குமாறு அவரது மனைவி, பிள்ளைகள், என்னிடம் கேட்டனர். இதனையடுத்து அந்த முகாமுக்கு சென்ற சமயம் செல்வரத்தினம் என்னைக் கண்டதும் தான் விடுதலைப் புலிகளுடன் தொடர்பற்றவர் எனத் தெரிவித்து தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்றாட்டமாகக் கேட்டார். விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லாதவர் என்பதால் அவரை விடுவிக்குமாறு கப்டன் லலித், கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா ஆகியோரிடம் கோரினேன். அவரை விடுவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அன்று இரவே அவரைக் கொலை செய்து விட்டார்கள். மறுநாள் நான் போனபோது அங்கு 10 சடலங்கள் கிடந்தன. சித்திரவதை மற்றொரு சம்பவத்தில் யோகேஸ்வரன் என்பவர் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் தயா கட்டடத்தில் உள்ள முகாம் படையினர் அவரைக் கைதுசெய்தனர். அடுத்தநாள் “சி” வதைமுகாமுக்கு கொண்டு சென்றனர். இந்தமுகாம் கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்தது.


பிரஸ்தாப நபரை விடுவிக்குமாறு மேலிடத்தில் இருந்து கிடைத்த உத்தரவை அந்த முகாமுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு அவர் தலைகீழாகக் கட்டப்பட்டிருந்தார். பிளேட்டினால் அவரது உடலில் வெட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெப்டினன்ட் துடுகல்ல, உதயமார ஆகியேரே இந்தச் சித்திரவதையை செய்துகொண்டிருந்தனர். அந்த சித்திரவதை முகாமில் பாவித்த பொருள்கள் இப்போதும் அங்கிருக்கின்றன. (வாக்குமூலம் கொடுக்கப்பட்ட காலம்) அந்த முகாமில் இருந்த நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்து அங்குள்ள வீடு ஒன்றில் முன்னால் புதைத்தார்கள். பாஸ் பெற வந்தோருக்கு ஏற்பட்ட கதி அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள் கைதடி சென்று வியாபாரம் செய்ய பாஸ் பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார்கள். இது குறித்து கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனாவிடம் கேட்டேன். அவர்களை முகாமுக்கு வருமாறும், அங்கு வைத்து பாஸ் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் தகவலை அந்த இளைஞர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் முகாமுக்கு சென்றனர்.


மறுநாள் அந்த இளைஞர்களின் உறவினர்கள், அந்த இளைஞர்கள் இருவரும் இன்னும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர் அந்த இளைஞருக்கு. கைதடியில் வியாபாரஞ் செய்ய அனுமதிக் கடிதம் வழங்குவதாகத் தெரிவித்த கப்டன் ஸ்ரீ ஜெயவர்தனா, லெட்டினன்ட் துடுகல்ல ஆகியோர் அந்த இளைஞர்கள் இருவரையும் தலைகீழாகக் கட்டித் தூக்கிவிட்டுத் தாக்கியதைக் கண்டேன். மறுநாள் இரு இளைஞர்களும் இறந்துவிட்டனர். அரியாலை முகாமில் பணிபுரிந்த அப்துல் நஷார், ஹமீத் சமரசிங்க ஆகியோர் நன்றாகத் தமிழ் கதைப்பார்கள். அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றைக் காட்டுமாறு என்னிடம் கேட்டார்கள். இரவு நேரத்தில் அந்த வீட்டைக் காட்டினேன். அங்கு ஓர் ஆணும், பெண்ணும் இருந்தார்கள். “அந்த வீட்டின் சொந்தக்காரர் எங்கே?” என்று அவர்களிடம் கேட்டோம். “முன்வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று பதில் அளித்தனர். அதையடுத்து கப்டன் லலித் ஹோவகேயும், அப்துல் நஷார் ஹமீத்தும் அந்த வீட்டுக்கு சென்றனர்.


அங்கிருந்த இளம் தம்பதியினரைக் கைதுசெய்தனர். அவர்களை முதலில் “சி” சித்திரவதை முகாமுக்குக் கொண்டுசென்றனர். பின்னர் இருவரையும் செம்மணியில் உப்பளப் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு அவர்களைக் கூட்டிச் செல்லும்போது மண்வெட்டியை எடுத்துவரும்படி என்னிடமும், ஏ.எஸ் பெரேராவிடமும் கப்டன் லலித் ஹேவகே தெரிவித்தார். அதன்படி நாம் இருவரும் துப்பாக்கியுடன் மண்வெட்டியையும் கொண்டு சென்றோம். நான் செல்லும்போது கப்டன் ஹேவகே அந்தப் பெண்ணுடன் தனிமையில் நிற்பதைக் கண்டேன். அச்சமயம் அந்தப் பெண்ணின் உடலில் ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. பின்னர் அந்தப் பெண்ணின் கணவன் இருக்கும் இடத்துக்குப் பெண்ணை அழைத்துவந்தனர். என்னிடம் இருக்கின்ற மண்வெட்டியை வாங்கிய கப்டன் ஹேவகே இருவரின் தலையிலும் அடித்தார். அவருடன் இருந்த அப்துல் நஸார், ஹமீத், சமரசிங்க ஆகியோர் பொல்லுகளால் அவர்களைத் தாக்கினர். இருவரும் கீழே விழுந்துவிட்டனர். இருவரின் சடலங்களையும் எம்மை புதைக்கும்படி கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். நாம் அந்தச் சடலங்களைப் புதைத்தோம். அந்த இடத்தை என்னால் அடையாளம் காட்ட முடியும். அரியாலைப் பகுதியைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அங்குள்ள மக்களுடன் நன்றாகப் பழகியதால் என்னைப் பற்றி மக்கள் நன்றாகச் சொல்வார்கள்.


எனக்கு தமிழ் தெரியாததால் எனது சிவில் நிர்வாகப் பணிகளுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் என்பவரைப் பயன்படுத்தி வந்தேன். அரியாலைப் பகுதிக்கு நான் கடமைக்கு வர முன்பு அங்கு 50 பேர் காணாமல் போயிருந்தனர் என்று அறிந்தேன். அவர்கள் “சி“ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது. கல்லூரி மாணவியான கிருசாந்தியின் சடலம் என்னிடம் புதைக்கப்படுவதற்காக ஒப்படைக்கப்பட்டபோது அந்தச் சமயம் அது கிருசாந்தியின் சடலம் என்று எனக்குத் தெரியாது. வழமையாக உயர் அதிகாரிகள் பொதுமக்களைக் கொலைசெய்துவிட்டு சடலத்தைப் புதைக்கும்படி என்னிடம் தருவார்கள். நான் அவற்றை புதைக்க ஏற்பாடு செய்வேன். கிருசாந்தி கொலையுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, சடலத்தைப் புதைத்ததைத் தவிர. இந்தக் கொலை தொடர்பாக உயர் அதிகாரியின் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் இதனையே கூறினேன். கிருசாந்தி கொலை வழக்கில் முறைப்பாட்டுக்காரர்களின் வாக்குமூலங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் எதிரிகளின் வாக்குமூலங்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. கொலைப் பயமுறுத்தல் செம்மணியில் புதைகுழி இருப்பதாக நான் சாட்சியம் அளித்தால் எனது குடும்பம் கொலைசெய்யப்படும் என்று அச்சுறுத்தல் கடிதங்கள் வந்தன.


அவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளேன். செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன். தூக்குத் தண்டன் விதிக்கப்பட்ட ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார். அதில் ஒன்றில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு கைதியான ஜெயதிலகவும் சில புதைகுழிகளைக் காட்டத் தயாராக இருக்கின்றார். என்னால் சடலங்கள் புதைக்கப்பட்ட மூன்று இடங்களைத் தற்சமயம் அடையாளங்காட்டமுடியாது என்று நினைக்கிறேன். இந்த சம்பவங்கள் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் வாக்குமூலம் அளித்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனால் அங்கிருந்து எலும்புகள் எடுக்கப்பட்டதாக அறிகிறேன். இதற்காகவே மண் மாதிரிகளை எடுக்குமாறு கோரினேன். படையினரையோ, நாட்டைக் காட்டிக்கொடுக்க நான் வாக்குமூலம் அளிக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், சில இராணுவ அதிகாரிகளின் செயல்களை அம்பலப்படுத்தவுமே இந்த வாக்குமூலத்தை அளிக்கிறேன். எனக்கு இந்த நீதிமன்றத்தால் நீதி கிடைக்காமல் போனாலும் சர்வதேச நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும் என நினைக்கிறேன். சோமரத்ன ராஜபக்ச சாட்சியாளர்கள் பற்றி எப்போதும் அதிகாரத் தரப்பினரின் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.


அவர்களின் குற்றங்களைச் சுமக்க ஒரு தொகுதி தரப்பினர் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றர். கிருசாந்தி படுகொலையிலும் அதுவே நடந்தது. கிருசாந்தி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற விடயம் தெரியவந்தவுடன் யார் தலையிலாவது அந்தக் குற்றத்தை கட்டிவிட வேண்டிய தேவை அப்போது அதிகாரத்திலிருந்தவர்களுக்கு எழுந்தது. அதில் முதலில் சிக்கியவர் சோமரத்ன ராஜபக்ச. அவரளித்த வாக்குமூலங்களில் தன்னை ஒரு கீழ்நிலை துருப்பினனாகவும், தமிழர்கள் படும் இன்னல்களைப் புரிந்துகொண்டவராகவும் வெளிப்படுத்தியிருக்கின்றார். அதிலிருக்கின்ற உண்மை, பொய்களுக்கு அப்பால் ஒரு சிங்கள துருப்பினன், நடந்து முடிந்த படுகொலையின் சாட்சியமாக மாறியிருந்தமை வரலாற்றில் குறிப்பிடவேண்டிய ஒன்று. அதனால்தான் என்னவோ சோமரத்த ராஜபக்ச ஏனைய துருப்பினர் போலல்லாமல் அதிக தண்டனையை அனுபவிக்க வெண்டிய நிலையை எதிர்கொண்டார்.


சோமரத்ன ராஜபக்ச கொடுத்த வாக்குமூலத்தின் பின்னர் அவர் எதிர்கொண்ட பாதிப்புகள் அதிகம். சிறைக்கூடத்துக்குள்ளேயே தாக்குதலுக்கு இலக்கானார். அவரது குடும்பம் துப்பாக்கி குறிகளுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டது. இவ்வளவு அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு சாட்சிசொன்னார் அந்தச் சிங்களவர். ஆனால் ஒரேயொரு சாட்சியத்தோடு அடக்கி வாசிக்கப் பழகிக் கொண்டார். இவருடன் சேர்ந்து மேலும் எட்டுப் படையினர் கைதாகியிருந்தனர். ஜெயசிங்க, பிரியதர்சன பெரேரா, அல்விஸ், முத்துபண்டா, ஜெயதிலக, இந்திரகுமார நிஸாந்த என்பர்களே கைதுசெய்யப்பட்டிருந்தனர். இதில் இருவர் தப்பியோடியிருக்க அல்விஸ் மூளை மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அத்தோடு கைதுசெய்யப்படவர்கள் இனங்காட்டிய இராணுவ உயரதிகாரிகள் பின்னர் விசாரிக்கப்பட்டார்களா என்பதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. அதில் சம்பந்தப்பட்ட சில அதிகாரிகள் போரில் இறந்துவிட்டனர் என்றும் காயப்பட்டனர் என்றும் செய்திகள் வந்தன.


பெரேரா, ஜெயசிங்க போன்றோர் ஏனைய இடங்களிலும் மனித புதைகுழிகள் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அவர்களிடமும் இந்தப் படுகொலை தொடர்பிலான ஆதாரங்கள் இருந்தன. ஆனால் அவர்களின் கதைகள் பெரியளவில் கவனத்தில் எடுக்கப்படவில்லை. சோமரத்ன ராஜபக்ச காட்டிய இடங்களும், அவர் கொடுத்த வாக்குமூலத்துக்கு அமைவாகவுமே புதைகுழிகள் தோண்டப்பட்டன. இங்கு கைதாகிய இராணுவத்தினர் அரியாலைப் பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே. இந்தப் பகுதியில் நடந்த காணாமல் போதல், கைதுகள் தொடர்பிலான ரகசியங்கள் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது.


யாழ்ப்பாணத்தில் ஏனைய பகுதிகளில் பரவலாக நடத்தப்பட்ட சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் பற்றிய தகவல்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் கொடுத்த வாக்குமூலத்திலேயே இவ்வளவு தொகையானவர்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தெரியவந்தது என்றால் அந்தக் காலத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துருப்பினருக்கும் எத்தனை குழிகள் தெரிந்திருக்கும்அங்கு என்ன நடக்கின்றது என்று யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இவர்களின் கைதுகளும் குற்ற ஒப்புதல்களும் இலங்கை இராணுவத்தின் மெய்வடிவத்தை வெளிச்சமிட அப்போது போதுமான செய்தியாக இருந்தது. ஆனாலும் வழமைபோலவே இலங்கையின் அரச தரப்பு இராணுவத்தின் குற்றங்களை உடனடியாக ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. கால நீடிப்பின் ஊடாக அநீதியை வழங்கிவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையில் செயற்பட்டது. அது சாத்தியமும் ஆனது. 1996 ஆம் ஆண்டில் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட செம்மணி விவகாரம் 1999 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவரை இழுபட்டது. இந்த மனிதப் புதைகுழியில் கிட்டத்தட்ட 400 பேர் புதைக்கப்பட்டிருந்தனர் என்று குற்றமிழைத்தவர்கள் ஒப்புக்கொண்டனர். அந்தக் காலப்பகுதியில் யாழில் 600 பேர் காணாமல் போயிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை இன்றுவரை அறியமுடியவில்லை. சிலருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. மிகுதியான இளைஞர், யுவதிககைளத் தேடும் பணியை அவர்களின் பெற்றோர் இன்னமும் கைவிடவில்லை.


இந்தக் கைதுகளுக்கும் காணாமல் போதல்களுக்கும் பின்னணியில் சொல்லப்படும் காணரம் புலிகள் அல்லது புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்பதே. ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெறும் அப்பாவிகள் என்பதை ஊரும், உறவுகளும் அறிந்தே வைத்திருக்கினர். 1996 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட யாழ்ப்பாணத்தினுள் பெருமளவிலான விடுதலைப் புலிகள் ஊடுருவி விட்டனர் என்ற சந்தேகம் இளைஞர் கைதுகளுக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த சந்தேகம் பொய்யானதாக இருந்தபோதிலும் அந்த ஆண்டில் முல்லைத்தீவில் இழக்கப்பட்ட 1200 உயிர்களுக்கு பதிலீடு யாழ்ப்பாணத்தில் சரிசெய்யப்பட்டது என்பது தமிழர்களுக்குத் தெரிந்தே இருந்தது. யாழ்ப்பணத்தை இழந்த புலிகள் உடனடியாக ஓர் இராணு வெற்றியை அடைய முயன்றனர். முல்லைத்தீவு இராணுவத் தளம் மீதான தாக்குதல் யாழ்ப்பாண இழப்பைச் சமன்செய்தது. அத்துடன் இராணுவத்தரப்பிற்கு ஆளனி மற்றும் படையப் பொருள்கள் ரீதியிலான பேரிழப்பையும் இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் தனது வேட்டையை இராணுவம் ஆரம்பித்தது. இனப்படுகொலையை ஒத்த இந்த வகை பலியெடுப்பு யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்தது. அதன் விளைவே செம்மணி மனிதப் புதைகுழி. புதைகுழிகள் அடையாளம் காட்டப்பட்ட பின்னரும் அப்போதிருந்த இலங்கை அரசு பெருங்கால நீடிப்பை திட்டமிட்டு உருவாக்கியிருந்தது. உள்நாட்டு அரசியல் கட்சிகளும், பாதிக்கப்பட்ட மக்களும், மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச மன்னிப்புச் சபையும் முன்வைத்த கோரிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் நீண்டகாலமாக அரசு பதிலளிக்கவில்லை.


விசாரணை, நீதிமன்றத்தீர்ப்பு, குற்றவாளிகளின் உடல்நிலை பாதிப்பு, சரியான நிபுணர்கள் இல்லை, தோண்டுவதற்குரிய காலநிலை இன்னும் வரவில்லை எனப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. ஆயினும் சர்வதேச மன்னிப்புச் சபையும், பிற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் பிரயோகித்த அழுத்தத்திற்கு இலங்கை அடிபணிந்தது. அதைவிட கிருசாந்தியின் சார்பில் வழக்கை முன்நின்று நடத்திய குமார் பொன்னம்பலம் போன்ற சட்டத்தரணிகள் அப்போதைய ஆளுந்தரப்பிடம் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களான இருந்தனர். நேரடித் தொடர்புகளை கொண்டிருந்தவர்களாக இருந்தனர். அரசிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாகவும் இந்த விடயத்தை மூடிமறைக்க முடியவில்லை. விசாரணை குழுக்கள் தொடர்ச்சியாக இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தக் கூட்டு அழுத்தங்களின் விளைவாக 1999 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10 ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிகளைத் தோண்டும் பணி ஆரம்பமாகியது.


அமெரிக்க நிபுணர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை. ஏசியா பௌண்டேசன் அதிகாரிகள், துறைசார்ந்த பேராசிரியர்கள், பொதுமக்கள், உள்ளூர் அதிகாரிகள், அமைப்புகள், சர்வதேச ஊடகங்கள் கவனிப்பில் முன்னிலை வகித்தன. சோமரத்ன ராஜபக்ச முதலில் ஒரு புதைகுழியைக் அடையாளம் காட்டினார். முதல் கட்டமாக அவர் காட்டிய இடததிலிருந்து 2 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் ஒன்றில் கைகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன. மற்றைய எலும்புக் கூடு சேதம் அமைந்திருந்தததால் கைகள், கண்கள் கட்டபட்டிருந்தனவா என்பதை அறிய முடியவில்லை. கண்கள், கைகள், கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டின் மண்டையோட்டுப் பகுதியில்காணப்பட்ட ஆழமான சிதைவுகள் அடித்துத் தாக்கப்பட்டதால் ஏற்பட்டவையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டனர். இரண்டு எலும்புக்கூட்டிலும் அடி காயங்கள் தாராளமாகக் காணப்பட்டன. ஒரு எலும்புக் கூடு நிமிர்ந்தும் மற்றையது பக்கவாட்டிலும் படுத்திருப்பது போன்று போடப்பட்டிருந்தன.


இரண்டு எலும்புக் கூடுகளுக்கும் நடுவில் சிலிப்பர் கட்டைகள் காணப்பட்டன. இந்த எலும்பு மீட்பு சுவாரஸ்யங்கள் நீடிக்கவில்லை. இரண்டு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதோடு புதைகுழி தோண்டும் படலம் இடைநிறுத்தப்பட்டது. தமது பிள்ளைகளின் எலும்புகளைத் தேடி செம்மணி புதைகுழிக்கு வந்திருந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த எலும்பு ஆதாரங்கள் யாழ்ப்பாணத்தை மனிதப் புதைகுழியின் நகராக்கியது. தென் ஆசியாவிலேயே அதிகளவாக மக்கள் கொன்று புதைக்கப்பட்ட இடமாக செம்மணி புதைகுழியை ஊடகங்கள் அடையாளப்படுத்தின. புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளுக்கு மறுநாளே உரிமைகோரல்களும் யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியிருந்து எழுந்தன. அரியாலையில் இருந்த இயந்திர திருத்தகம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த வேளையில் காணாமல் போன இரு இளைஞர்களின் எலும்புகளாக அவை இருந்தன. 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இருவரும் வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இராணுவத்தால் கைதாகிப் பின்னர் காணாமல் போயிருந்தனர். அதன்பின்னர் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பற்றிய அறிக்கைகள் அடிக்கடி வெளியாகின. பல்வேறு தரப்பட்ட அரசியல் கட்சிகளும், உள்ளூர், சர்வதேச அமைப்புகளும் அதில் அடக்கம். ஏனைய சிப்பாய்களையும் செம்மணிக்கு கூட்டிவந்து மனிதப் புதைகுழிகளை அடையாளம் காட்டச் செய்ய வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. பக்கச்சார்பற்ற, நீதியான, விசாரணைகளை மேற்கொள்வதோடு, அனைத்துப் புதைகுழிகளையும் தோண்டி உண்மையைக் கண்டறியுமாறு செம்மணி வந்து திரும்பிய சர்வதேச பிரதிநிதிகள் கொழும்பில் அறிக்கைவிட்டனர்.


அதன் பின் அவர்களும் வாய்திறக்கவில்லை. பின்னைய நாள்களில் இந்தச் செய்திகளின் சூடு எப்படியோ குறைந்தது. விசாரணைக் குழுக்கள் அடிக்கடி வருவதாகவும், செம்ரெம்பர் 6 ஆம் திகதி மறுபடியும் தோண்டப்படும் எனவும் ஓர் அறிக்கை அரச தரப்பிலிருந்து விடப்பட்டது. அதன்படி குறித்த திகதியில் மீண்டும் தோண்டும் பணிகள் ஆரம்பமாகின. அமெரிக்க பிரதிநிதிகள் எலும்பு மீட்புப் பணிகளைக் கண்காணிக்க வந்திருந்தனர். இறுதியில் முடிவுகள் எதுவும் காட்டாமலேயே இந்த விவகாரம் மந்தமாகியது. பின்னர் எதிராளிகளின் வேண்டுகோளுக்கிணங்க வழக்கு விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் நடந்த புதைகுழி தோண்டலில் அதிகளவில் சேதமடைந்திராத எலும்புக்கூடுகள் இரண்டை மறுபடியும் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். சாட்சியாளர்கள் காட்டி சில இடங்களில் எலும்புக் கூட்டுத் தடயங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவை யாருடையவை என்பதை அடையாளம் காண முடியவில்லை. மூன்றாம் நாள் கண்டி வீதி- நல்லூர் நாயன்மார்கட்டு சந்திவீதி மூலையில் இருந்த இராணுவக் காவலரணின் பின்புறத்தில் மூன்று எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. அருகருகே புதைக்கப்பட்ட நிலையில் ஆடைகள் ஏதுமற்ற நிலையில் ஓர் இளம் பெண் மற்றும் ஆண் ஆகியோரின் எலும்புக் கூடுகளாக அவை இருந்தன. கொழும்புத் துறை பகுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்ட தம்பதியினரின் எலும்புக்கூடுகளாக இவை இருக்கலாம், அவற்றின் மண்டையோடுகள் பிளந்து காணப்பட்டன.


தலையில் அடித்துத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட வெடிப்பாக அவையிருக்கலாம் என சட்ட மருத்துவத்துறை நிபுணர் பேராசிரியர் நெரியெல்ல குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து புதைகுழி தோண்டும் பணிகள் நடந்தன. 20 பேரை புதைத்தனர் என்று சோமரத்ன ராஜபக்ச தெரிவித்திருந்த இடமும், கிணறும் தோண்டப்பட்ட போதிலும் அங்கு எலும்புக் கூடுகள் எவையும் இருக்கவில்லை. இதனால் சோமரத்ன மறுபடியும் செம்மணிக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது அவர் சொன்ன பதிலோடு, தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. “செம்மணி மற்றும் அரியாலைப் பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் உள்ள சரியான இடங்களையே நான் அடையாளம் காட்டினேன். அந்தப் புதைகுழிகளை தோண்டியபோது அங்கு சடலங்கள் காணப்படாததையிட்டு நான் அதிர்ச்சியடைகிறேன்” அதுவரையில் செம்மணியில் இருந்து 15 வரையிலான சடலங்களின் எலும்புகள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. அதே வருடத்தில் டிசம்பர் 6 ஆம் திகதி இதுவரையில் செம்மணியில் நடத்தப்பட்ட புதைகுழி ஆய்வு தொடர்பிலான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. காலநிலை மாறியது. களநிலை நிலவரங்கள் மாறின. அடித்த மழையிலும், வன்னியில் எழுத்த போர் அலைகளிலும் எல்லாமே மறக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரான ஆட்சி மாற்றமும் சமாதானமும் இந்தப் பெரியளவிலான மனிதப் படுகொலையை மறக்கச் செய்தன.


சோமரத்னவின் மரணதண்டனை பற்றிய செய்தியோன்று கடந்த வருடத்துக்கு முற்பகுதியில் வெளியான செய்தியொன்றில் படித்ததாக நினைவு. அவரோடு கைதானவர்கள் எங்கே? என்ன நடந்தது போன்ற கேள்விகளும், செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் நினைவைப் போல மறந்தேபோயிற்று. உலகளவில் நிரூபிக்கப்பட்ட இந்தக் குற்றம் அல்லது இனமொன்றை கூட்டுப் படுகொலை செய்தமைக்கான ஆதாரம் செம்மணி புதைகுழிக்குள்ளும் வருகின்றது. இதில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் மன்றங்களில் விசாரிக்கப்படுவதும் தண்டனைக்குள்ளாவதும் அண்மைக்காலம் வரை நடந்துகொண்டேயிருக்கின்றது. ஆனால் உலகின் கண்முன்னே, அமெரிக்காவின் கண்முன்னே சாட்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்ட செம்மணி மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இது இலங்கையில் இடம்பெற்ற உள்ளக விசாரணையொன்றின் நம்பிக்கைத் தன்மையினையும், பொறுப்புக்கூறும் போக்கையும் எடுத்துக்காட்டவும் கைவசமுள்ள சிறந்த ஆதாரங்களில் ஒன்று.


(பிற்குறிப்பு) அன்புள்ள அம்மா. நீங்கள் அனுப்பிய கடிதத்தை வாசித்தேன். கடிதத்தின்படி யாழ்ப்பாண மக்களின் மனவேதனைகளை என்னால் நன்கு உணரமுடிகின்றது. அதுமாத்திரமல்ல, இதுபோல் காணாமல்போகதாகக்கூறப்படும் பல இளைஞர்கள் பற்றிய விவரங்களையும்நான் அறிவேன். அவர்களுக்கு என்ன நடந்தது பற்றி நானும் என்றுடன் சிறைவைக்கப்பட்டுள்ள உதவியாளர்களும் நன்கறிவோம். இருப்பினும் எனது உதவியாளர்களின் நிலைமையோ கவலைக்கிடம். மேஜர் வீரக்கொடி, கப்டன் லலித் ஹேவா மற்றும் அவர்களுக்கு கீழ்பணியாற்றிய இளைய அதிகாரிகளே இந்த அநியாயங்களுக்கு பொறுப்பானவர்கள். கிருசாந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் இந்த அதிகாரிகள்பொறுப்பாவார். அம்மா! உங்கள் மகன் காணாமல் போன சம்பவத்திற்கும் கப்டன்ஹேவாவுக்கும் நேரடித்தொடர்பில்லை. உங்கள் மகன் பற்றி நான் எனது நண்பர்கள் மூலமாக விசாரித்தேன். உங்கள் மகன் விரைவில் அளுக்கடை நீதிமன்றதில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.


உங்களால் முடிந்தால் அனுராதபுரம் சென்று உங்கள் மகனைப் பற்றி விசாரித்தறிய முயற்சிக்கவும். இது தொடர்பாக முடிந்தளவு உதவியை நான் செய்வேன். அத்துடன் நான் தங்களிடமிருந்து ஒரு சிறு உதவியை எதிர்பார்க்கிறேன். அந்த நகைக்கடை பொடியனிடம் நான் நகைகள் வாங்கியது பற்றி கூறி அந்த நகைகளை வாங்கியதற்காக, “பில்”ஒன்றுப் பெற்று எனக்கு விரைவில் அனுப்பிவையுங்கள். அவரது தந்தையிடம் முழுவிவரங்களையும் கூறுங்கள். கடந்தகாலங்களில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்துமனவேதனையடைவதுடன் அவற்றுக்காக மன்னிப்புக்கோருகின்றேன். தங்களின் சம்பத் (குறிப்பு – இந்தக் கடிதத்தில் சோமரத்ன ராஜபக்ச “சம்பத்” என ஒப்பமிட்டுள்ளார். அவரை அவரது வீட்டில் செல்லமாக “சம்பத்” என்றே அழைப்பார்களாம்.


செம்மணியில்இருப்பதாக நம்பப்படும் பெரும் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக “யுக்திய“ வார இதழில் வெளியான கடிதத்தின் தமிழாக்கம். கிருசாந்தி குமாரசுவாமி வன்புணர்வு, கொலை வழக்கின் முதலாவது குற்றவாளியும், செம்மணி மனிதப் புதைகுழிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டவருமான சோமரத்ன ராஜபக்ஷ 1997 ஓகஸ்ட் மாதத்தில் காணாமல் போன மகன் ஒருவரின் தாய்க்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதம்- கடித உதவி, உதயன் )


——–


செம்மணி புதைகுழிகள்…!


1996ம் புரட்டாதி 7ம். நாள் யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெறித்து கொன்றனர். கிருஷாந்தியைத் தேடிச்சென்று இராணுவத்தினரிடம் கேட்டபோது தாய் இராசம்மாள், சகோதரர் பிரணவின் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்த வழக்கில் ஐந்து இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். அதில் ‘சோமரத்ன இராசபக்சே’ என்ற இராணுவ வீரன் அளித்த வாக்கு மூலம்:


“யாழ் குடாவில் பரவலாக கைது செய்து காணமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சித்திரவதி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் இரவில் எடுத்துச் செல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்படுவதுண்டு. 300 லிருந்து 400 பேர் வரை புதைத்த புதை குழிகளை என்னால் காட்டமுடியும்”.


In September 7, 1996, Krishanthi, a student of Chundikuli College, jaffna, was raped and strangled to death by the Army. Krishanthi’s mother Rasammaal, brother Pranavin and neighbor Krishnamurthy also were killed when they went to army in search of Krishanthi. Consequent to this incident, five army men were convicted by the court in this case.


One of the accused Somaratna Rajapajsa, deposed as follows, “Majority of the people who got arrested and disappeared in Jaffna Peninsula, were tortured and murdered. As per the instructions of higher officials, their bodies were taken in the nights and buried in Semmani. I cam locate some places where 300 – 400 people were buried”


என்ன செய்யலாம் இதற்காக ?


What is to be done about this ?


கிருஷாந்தி (வயது 18) யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி. க.பொ.த சா.த பரிட்சையில் ஏழு டி, ஒரு சி பெறுபேற்றை பெற்ற மிக திறமை­யான மாணவி என கணிக்கப்பட்டவர். 12 வருடங்களுக்கு முன்னர் தனது ஆறாவது வயதிலேயே கிருஷாந்தி தனது தகப்பனாரை இழந்து விட்டிருந்தார். கிருஷாந்தியின் தகப்பனார் திரு.இ.குமாரசாமி யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் பிரதம லிகிதராக சேவையாற்றியவர். கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் மட்டுமே.


07.09.1996 அன்று சனிக்கிழமை யாழ். மாவட்டம் கைத்தடியைச் சேர்ந்த கிரிஷாந்தி குமாரசுவாமி க.பொ.த உ.த இராசயனவியல் பரீட்சையை எழுதிவிட்டு முற்பகல் 10.30 மணியளவில் வீடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது எனும் வரவேற்பு வளைவு உள்ள இடத்தினருகிலுள்ள, கைதடி காவலரணில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதை கிருஷாந்தியின் ஊரார் கண்ணுற்றிருந்தனர். வீட்டில் தாய் இராசம்மா குமாரசுவாமி (வயது 59) மகளை எதிர்பார்த்து காத்திருந்தார். இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் துறையில் பட்டப் படிப்பை முடித்துக்கொண்டவர். யாழ்ப்பாணம் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயத்தின் உப அதிபர். இதை விட கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலயத்தினதும் முன்னாள் ஆசிரியை. 38 வருட ஆசிhpய பணியை ஆற்றி எதிர்வரும் யூலை 24ல் ஓய்வு பெற வேண்டியவர்.


கிருஷாந்தியை எதிர்பார்த்து காத்திருந்த தாயாரு­க்கு மாலையில் ஊரார் ஒருவர் மூலமாக கிரிஷாந்தியை இராணுவம் மறித்து வைத்த செய்தி வந்தடைந்தது. அயல் வீட்டுக்காரர் சிதம்பரம் கிருபாமூர்த்தியை துணைக்கு அழைத்தார் (வயது 35, தென்மராட்சி ப.நோ.கூ.சங்கத்தின் உதவியாளர்) அவருடன் வெளியில் இறங்கும் போது டியுசன் போய் வந்து சேர்ந்த மகன் பிரணவன் (வயது 16, யாழ்.சென் ஜோன் கல்லூரி க.பொ.த உ.த முதலாமாண்டு மாணவன்) தானும் வருவதாகக் கூறவே மூவருமாகப் புறப்பட்டனர்.


கைதடி இராணுவ காவலரணில் சென்று விசாரித்தபோது தாம் கிருஷாந்தியை பிடித்ததை யாரும் காணவில்லை என்று எண்ணியிருந்த இராணுவத்தினருக்கோ அதிர்ச்சியளித்தி­ருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் அப்படி யாரையும் கைது செய்யவில்லை, தடுத்து வைத்திருக்கவுமில்லை என தர்க்கம் புரிந்துள்ளனர். தடுத்து வைத்திருந்ததை கண்ட ஊர் மக்களே தம்மிடம் அதைத் தெரிவித்தனர் என்று தாயார் வாதம் செய்தார். அத் தருணத்தில் கிருஷாந்தி ஏற்கெனவே மூன்று இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளா­கியிருந்தார். எனவே இந்த நிலையில் கிருஷாந்தியை விடுவிக்கவும் முடியாது. இவர்களுக்கோ ஊர்ஜிதமான தகவல் கிடைத்திருந்தது என்பதை உணர்ந்த இராணுவத்­தினர் இவர்களை வெளியில் விட்டால் தமக்கு ஆபத்து என்பதால் இராணுவத்தினர் அம்மூவரையும் பிடித்து வதை­த்து கொன்று விட்டனர். அன்று இரவுக்குள்ளேயே இரண்டு இராணுவ பொலிஸாரும் (Military Police), ஒன்பது இராணு­வத்தினருமாக பதினொரு பேர் கிருஷாந்தியை தொடர்ச்சி­யாக பாலியல் வல்லுறவு செய்தனர்.


இறுதியாக கிரிஷாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்து விட்டுள்ளனர். இதனை நான்கு இராணுவத்தினர் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


போனவர்கள் வீடு திரும்பாத நிலையில் ஏனையோர் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை. இந்த நிலையிலேயே கிருஷாந்தியின் குடும்பத்தில் எஞ்சியிருந்த கிருஷாந்தியின் சகோதரி பிரஷாந்தி ஜனாதிபதிக்கும் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி தனக்கு நீதி வழங்குமாறு கேட்டார். இது தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் புரட்டாதி 17ம் திகதியன்று பாராளுமன்­றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக பல பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அன்று அவர் கேள்வி எழுப்பிய போது பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்தவத்த அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் ரிச்சட் பத்திரன அக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கோரியிருந்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் எவ்வித பதிலையும் அவர்கள் அளிக்கவில்லை. இராணுவத்தரப்பிலிருந்து பொறுப்பான பதிலும் கிடைக்­கவில்லை. இச்சம்பவம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் யாழ்ப்பாணத்தில் அமுலிலிருக்கும் விசேட பத்திரிகைத் தணிக்கையும் தடையாக இருந்து வந்தது.


இறுதியில் நால்வரினதும் உடல்களையும் புதைத்­ததைக் கண்ட 13 வயது சிறுவனொருவனே விபரத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஒன்றரை மாதங்களின் பின் 4 சடலங்களும் செம்மணி மயானத்திலிருந்து மீட்கப்பட்டன. கொழும்பிலுள்ள கிருஷாந்தியின் குடும்பத்தவர்கள் பிரேதங்களை கொழும்புக்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகளை செய்ய தீர்மானித்த போது இராணுவம் மறுத்தது. மாறாக ஐந்து இலவச விமான டிக்கற்றுகளை தருவதாவும் யாழ்ப்பாணத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யும்படியும் வற்புறுத்தினர்.


ஆனால் இறுதியில் குமார் பொன்னம்பலம், கிருஷாந்தி வீட்டாரின் குடும்ப சட்டத்தரணி டீ.பூபாலன் ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து பிரேதங்களை கொழும்புக்கு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டனர். ஆனாலும் பிரேதங்களை கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் உத்திரவிட்டிருப்பதைக் காரணம் காட்டி உறவின­ர்களிடம் அவற்றைக் கையளிக்க பொலிஸார் மறுத்தனர். பின்னர் மீண்டும் சட்டத்தரணிகள் இவ்விடயத்தில் தலையிட்டதன் பின்னரே ஐப்பசி 25ம் திகதியன்று பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், பிற்பகல் 1.30 மணியளவில் இரு மணித்தியாலங்களில் இறுதிக்கிரியைகள் செய்து முடிக்க வேண்டுமென்ற பொலிஸ் நிபந்தனைக்கிணங்க சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு கனத்தையில் தகனம் செய்யப்பட்டன.


ராசம்மா குமாரசுவாமியின் சகோதரன் திரு நவரட்னத்தின் கருத்தின்படி இறந்த தமது சகோதரியினது அவரது மகளினதும் 2 லட்சத்துக்குகிட்டிய பெருமதியுள்ள ஆபரணங்கள் கூட சூறையாடப்பட்டிருந்தன.


இச்சம்பவமானது பல சம்பவங்களில் ஒன்று மாத்திரமே அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தினம் தினம் இவ்வகை சம்பவங்களுக்கு முகம் கொடுத்த வண்ணமே உள்ளனர்.


கடந்த புரட்டாதி 27ம் திகதியன்று வாழைச்சேனை­யில் வைத்து இராணுவத்தினர் பலர் சேர்ந்து ஒரு தமிழ் கடையொன்றில் அட்டகாசங்களைப் புரிந்த பின்னர் கடைக்­காரரையும் தாக்கியதன் பின்னர் அவரும் பிள்ளைகளும் ஓடித் தப்பி விடவே இராணுவத்தினரிடம் சிக்குண்ட அவரது மனைவியை இராணுவத்தினர் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இது தொடர்பாக இராணுவ சந்தேக நப­ர்­களை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.


சில வாரங்களுக்கு முன் கோண்டாவில் பகுதியில் ராஜனி வேலாயுதப்பிள்ளை (வயது 22) எனும் ஒரு ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டபின் கொல்லப்பட்ட நிலையில் மலசலகூடமொன்றில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக ஆறு இராணுவத்தினரை சந்தேக­த்தின் பேரில் தடுத்து வைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. அது போலவே ஏற்கெனவே திருமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேசத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் போது 24 பேர் கொல்லப்பட்ட அதே நேரம் 16 வயது யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அது தொடர்பாகவும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவிததிருந்தது.


மனித உரிமைகள் அமைப்புகளின் விபரங்களின்படி தற்போது யாழ் குடா நாட்டில் மட்டும் 300 பேருக்கும் மேற்பட்­டோர் காணாமல் போயுள்ளனர் என்றும் இதில் இந்நிலையில் கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தென்னிலங்கை­யில் இராணுவத்தினரின் கட்டற்ற செயற்பாடுகளின் காரண­மாக பாதிக்கப்பட்ட பலருக்கு இன்னமும் நீதி வழங்கப்படவே­யில்லை.


இராணுவத்தினர் கடந்த 1987 – 1989 காலப்பகுதியில் மேற்கொண்ட கொலைகள் பற்றி விசாரணை செய்வதாக கூறி ஆட்சியிலமர்ந்த அரசாங்கம் இது வரை நட்டஈடு வழங்கு­வதை மாத்திரமே தமது வேலைத் திட்டமாக அமைத்து வருகின்றது. அது கூட மிக மிக சொற்பமானவர்களுக்கே என்பது தெரிந்ததே. ஆனால் பதவியிலமர்ந்ததிலிருந்து இது வரை இராணுவத்தின் அட்டுழியங்கள் குறுகிய காலத்தில் இது வரையில்லாத அளவு அதிகரித்து வருவது எதனைக் குறிக்கிறது? இது வரை அப்படி எந்த இராணுவத்தினருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவி­ல்லை. வெறுமனே வழக்கு, விசாரணை, என்று இழுத்தடிக்கப்­பட்ட வண்ணமேயுள்­ளது. மைலந்தனை, கொக்கட்டிச்­சோலை தொடக்கம் சென்ற வருட பொல்கொட ஏரி சடலங்­கள், புல்லர்ஸ் வீதி மர்மங்கள் வரை இது தான் நிலைமை.


இந்நிலைமை இராவுத்தினரின் மிலேச்ச நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிப்பதாயும் அங்கீகரிப்பதாயுமே அமைய முடியும். ”இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்­டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது” என சில வாரங்களுக்கு முன்பு இராணுவத்தின் 47வது ஆண்டு பூர்த்திவிழா கொண்டாடப்­பட்ட பேது இராணுவத் தளபதி ரொகான் தலுவத்தை தெரிவித்திருந்த விடயம் மிகவும் நகைக்கச் செய்யும் விடயமாகவே கருத வேண்டியுள்ளது. ஏற்கெனவே தமிழ் அப்பாவிப் பொதுமக்கள் மீதான இன அழிப்பு, சொத்தழிப்பு, கலாச்சார அழிப்பு, வள அழிப்பு, உள அழிப்பு, சூறையாடல் என்பன கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. உட்பட இத்தகைய சம்பங்கள் இந்த யுத்தம் யாரை மீட்பதற்கானது எனக் கேள்வி எழுப்பாமல் இருக்க இயலவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஒரு பெண்.


இலங்கையின் அரசியலமைப்பின் படி அவர் நாட்டின் முப்படைகளின் தலைவரும் கூட. இந்நிலையில் இச்சம்பவம் பற்றி ஆகக்குறைந்தது எந்த வித சலசலப்பையும் காட்டாத ஜனாதிபதியின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? ஜனாதிபதி தொடர்ந்து சிங்கள மக்களின் ஜனாதிபதியாக மட்டுஆம இருப்பாராயின் இடம்கொடுப்பாராகின் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாவதை அவர் ஊக்குவிப்பதாகவே அர்த்தம் கொள்ள முடியும்.


-1996 வெளிவந்த பத்திரிகை


கிருசாந்தி – இனப்படுகொலை நிறுவலில் ஓர் புள்ளி!

ஜூலை 83 முதல் செம்மணி வரை சிங்களத்தின் இனப்படுகொலைகள் .!


நான் தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் பற்றி கவலைப்படவில்லை . இப்போது நாம் அவர்களைப் பற்றி எண்ணிப்பார்க்க முடியாது; அவர்களது உயிர்கள் பற்றியோ அபிப்பிராயங்கள் பற்றியோ எண்ணிப்பார்க்க முடியாது. எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அழுத்தத்தை வடக்கில் போடுகிறீர்களோ இங்கு சிங்களவர்கள் அவ்வளவு மகிழ்வடைவார்கள். உண்மையில் நான் தமிழர்களை விரட்டியடித்தால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்

– முன்னாள் சிறீலங்காஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தா


1983-ஜூலை இனப்படுகொலை தமிழ் சிங்கள தேசங்களுக் கிடையேயான பிணக்கை உலக அரங்கிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய நிகழ்வு ஆகும். அரச ஆதரவுடன் சிங்கள இனவாத இயந்திரம் நடாத்தி முடித்த இப் படுகொலைசிங்கள தேசத்துடன் தமிழ்த் தேசம் சேர்ந்து வாழலாம் என்ற அபிப்பிராயங்களின் மேல் சிங்கள தேசம் தொடுத்த வினா ஆகும்.


15 ஆண்டுகளின் பின் உலகை, சிங்கள தேசத்தின் மற்றுமொரு இனப்படுகொலை உலுக்கியிருக்கிறது. மெளமாக கொலை செய்யப்பட்டு யாழ் புதைக்கப்பட்ட பல நூறு தமிழர்களின் விவகாரம் இன்று பகிரங்கமாக தொடங்கிவிட்டன. கிருஷாந்தி என்ற தமிழ் மாணவி மீது நடாத்தப்பட்ட சந்திரிகா அரசின் கொடுரத்தை உலக சமூகத்திற்கு கொண்டு சென்று தமிழர்கள் போராடியதன் விளைவு, சிங்கள அரச இயந்திரத்தை மற்றுமொரு முனையில் உடைக்கத் தொடங்கியுள்ளது .


இந்த இரு வேறுபட்ட காலகட்டத்து இனப்படுகொலை நடவடிக் கைகளானது, தமிழர்களின் மீதான சிங்கள இனவெறி குரோதம் கால ஓட்டத்தினுாடு மாற்றம் காணாமல் ஆழம் பெற்றிருப்பதை காட்டுகின்றது . 15 வருட காலத்து இடை வெளியில் போர் பாரிய அழிவினை சிங்கள இனவெறி ஆதிக்கத்திற்குகொடுத்துள்ளது. சிங்களத்தின் பொருளாதார அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளது; சிங்கள சமூக பண்பாட்டு வாழ்வின் சமூக நிலைமை சிதறடிக்கப்பட்டுள்ளது; அதனது அரசியல் வாழ்வு கறைபடிந்த – போரை அதிகார லாபங்களுக்காக தொடரும் இனவெறி தலைமைகளிடம் அகப்பட்டுள்ளது. தொடரும் பாசிசத்தின் அடிப்படை நியதி சிங்கள தேசத்தின் தமிழின எதிர்ப்பை அணையாது பாதுகாக்கின்றது


செம்மணி புதைகுழிகள் விடயமானது யாழ் குடாநாட்டில் சிறீலங்கா புரிந்துள்ள போர்க் குற்றத்திற்கு ஆதாரமாகும். உலக இயக்கப் போக்கில்போர்க் குற்றங்களையும் இனப் படுகொலைகளையும் தண்டிக்கும் அதிகாரம் நசுக்கப்படும் – போராடும் மக்கள் கரங்களில் கொடுக்கப்படவில்லை


தற்போது சர்வதேச நீதி மன்றத்தில் இடம்பெறும் சேர்பியர்களுக்கு எதிராக பொஸ்னியா தொடுத்துள்ள இனப்படுகொலை குற்றங்களுக்கான ஆதாரங்களாக சேர்பியர்களின் பிகக் (Bihac) மற்றும் பகுதிகளில் இரகசியமாக உருவாக்கிய புதைகுழிகள் காட்டப்படுகின்றன. மறுபுறம் றுவண்டாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை புதிய டுட்சி இன மக்களின் அரசு நீதி விசாரணைகளின் பின் பகிரங்கமாக சுட்டுக்கொன்று வருகின்றது. இத் தண்டனைகளானது நீதி வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக வெளிக் காட்டும் நடவடிக்கையென ருவண் டாவின் நீதி அமைச்சர் வர்ணிக்கிறார் செம்மணி புதைகுழிகள் இதனை ஒத்த நடவடிக்கையாகும்.இடதுசாரிசிங்கள நாளேடான ‘யுக்திய’ இதுதொடர்பாக வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவலில் இனப் படுகொலைகள் உயர்தலைவர்களினதும், தளபதி களினதும் உத்தரவின் பெயரில் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது


சிறீலங்கா முப்படைகளினதும் கூட்டுத் தளபதி ஜனாதிபதி சந்திரிகா, பாதுகாப்பு இணை அமைச்சர் ஜெனரல் ரத்வத்த ஆகியோர் முதல் யாழ் குடாநாட்டு இராணுவத்தை தலைமை தாங்கிய தளபதிகள் வரை இவ்வாறு இனம் காணப்பட்டுள்ள நிரூபிக்கத்தக்க போர்க் குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளாகியுள்ளனர்.

உலக இயக்கப் போக்கில் போர்க்குற்றங்களையும், இனப் படுகொலைகளையும் தண்டிக்கும் அதிகாரம் நசுக்கப்படும் – போராடும் மக்கள் கரங்களில் கொடுக்கப்படவில்லை. சர்வதேச நீதி நெறிமுறைகளும் நாடுகளுக்கிடையேயான உறவுகளுமே இனப்படுகொலைகளை தண்டிக்கும் விடயத்தில் ‘தீர்மானிக்கும்’ அதிகாரத்தை கொண்டுள்ளன


ருவண்டா இனப்படுகொலைகள் இடம்பெற்றபோது இவ் உலக நீதி அமைப்பும் – மன்றங்களும் அமைதி காத்தன. தத்தமது நலன்களுக்கேற்ற இராஜதந்திர மொழிகளை சர்வதேச சக்திகள் பரிமாறிக் கொண்டன.


ஈற்றில் இப் படுகொலைகளை புரிந்த சக்திகள் தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்ட மக்களுக்காக அதிகாரததை கைகளில் எடுத்தபோது “ருவண்டா இனப்படுகொலையில் தான் சரியாக நடக்கவில்லை ” என அமெரிக்கா ஜனாதிபதி கிளிண்டன் மன்னிப்புக் கேட்கின்றார்.


பொஸ்னியாவில் சேர்பிய அரசுஇனப் படுகொலைகளை அரங்கேற்றிய போது அதற்கெதிரான சர்வதேச சக்திகளின் நடவடிக்கை காத்திரமானதாக இருக்கவில்லை . பல்லாயிரம் படுகொலைகளும் – இழப்புகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே பொஸ்னியா விடுவிக்கப்பட்டது இன்று பொஸ்னிய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்ட சேர்பியர்களை குற்றவாளிகளாக முன்நிறுத்தியுள்ளது.


இவ்விரு இனப்படுகொலைகளையும் ஒத்த தமிழர்கள் மீதான சிங்கள தேசத்தின் படுகொலைகள் சர்வதேச நிகழ்ச்சித் திட்டத்தில் இன்று உரிய இடம் பெறவில்லை சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட பிரச்சார யுக்திகளும் பனிப்போருக்குப் பிற்பட்ட காலத்தில் தென்னாசியப் பிராந்தியத்தில் இழந்துவிட்ட கேந்திரமுக்கியத்துவம் இவ் சர்வதேச மந்தப் போக்கிற் காரணங்களாகும்


ஆயினும் இனப் படுகொலைக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற இயற்கையான விதி இங்கும் பொருத்தமாயுள்ளது. 1983- ஜூலைப் படுகொலை முதல் செம்மணி புதைகுழிகள் வரை பல்லாயிரம் தமிழர்களை கொன்றொழித்த சிங்கள இனவாத குற்றவாளிகளை எமது வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. நாளை நாம் பலம் பெற்று எம் தேசம் விடுவிக்கப்படும் போது சர்வதேச நெறிமுறை எமது விண்ணப்பத்தை அங்கீகரிக்கும். போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமாயின் நாம் விடுதலைக்கான எமது போரை வெல்ல வேண்டும்


வெளியீடு :எரிமலை இதழ் (1998)

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.