நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற மகோற்சவ தேர்த்திருவிழா!

 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது


இன்று அதிகாலை நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்றது. முன்னதாக ஆறுமுக சாமி மஞ்சள் அலங்காரத்தில் உள்வீதி உலா வந்தார்.


அதன்பின்னர் வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை சமேதரராய், சிறிய தேரில் ஆரோகணித்து, உள்வீதியுலா வந்தார்.


கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகின்றன.


ஆகவே, இம்முறை தேர் திருவிழாவின்போது தேர் இழுக்காது வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.