வீணாட் கழிவதுவும் விளையாட்டே – சுடலை!!


 பிணமா யிருப்பதுவும் விளையாட்டே – அதைப்

பெற்றோர்கண் டழுவதும் விளையாட்டே
குணமாய்க் கழுவியதும் விளையாட்டே – ஈமங்
கொண்டுபோய்ச் சுட்டதுவும் விளையாட்டே.
செத்தோர்க் கழுவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதுவும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதும் விளையாட்டே.
வீணாட் கழிவதுவும் விளையாட்டே – சுடலை
சேரும்வரை அழுவதும் விளையாட்டே
மெத்தஞானம் பேசுவதும் விளையாட்டே – குளித்து
வீடுவந்து மறப்பதுவும் விளையாட்டே.
-கடேந்திர நாதர் (விளையாட்டுச் சித்தர்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.