இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது பாகிஸ்தான்!!

 


ஐசிசி உலக கோப்பை தொடரின் 'சூப்பர் 12' சுற்றின் நான்காவது ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை செய்தன.

இதில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. ஆம், அதிரடி மன்னன் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரை தொடர்த்து அதிரடி ஆட்டக்காரர் கே எல் ராகுல் 8 பந்துகளை சந்தித்து, 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் வந்த முதல் பந்திலையே சிக்ஸர் அடித்து அசத்தினர். ஆனாலும் 11 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் விராட் கோலியுடன் கைகோர்த்த ரிஷப பந்த் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதலில் நிதானமாக ஆடினாலும் பின்னர் அதிரடியாக ஆட தொடங்கியது. இதில், ரிஷப் பந்த் 30 பந்துகளில் 39 ஓட்டம் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய விராட் கோலி அரைசதம் கண்டு 57 ஓட்டங்களை குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜடேஜா 13 ஓட்டங்களுக்கும், ஹர்திக் பாண்டிய 11 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 151 ஓட்டங்களை குவித்தது.

152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. முதல் ஓவர்லயே 10 ரன்களை எடுத்து அசத்திய தொடக்க ஆட்டக்காரர் முகமத் ரிஷ்வான் உடன் இரண்டாவது ஓவரில் ஜோடி சேர்ந்த பாபர் அசாமும் இணைந்து 8 ஓட்டங்களை சேர்த்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ஓட்டங்களை எடுத்து பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. தொடக்க வீரர்களான பாபர் அசாம் 68 ஓட்டங்களுடனும், ரிஸ்வான் 79 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணியை வென்றதே இல்லை என்ற வரலாற்றை மாறியமைத்துள்ளது பாகிஸ்தான் அணி.     


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.