பருத்தித்துறை போராட்டத்திற்கு குருநகர் மீனவர்கள் எதிர்ப்பு!


 இந்தியன் ரோலர் படகினை தடை செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையான கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குருநகர் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.


இந்திய இழுவைபடகுகளால் கடல் வளம் பாதிக்கப்படுகின்றது. இன்றைய போராட்டத்தை முன்னெடுப்போர்.


எந்த இழுவை படகுகளை தடை செய்ய வேண்டும் என குறிப்பிடாமல் போராட்டத்தினை மேற்கொள்வது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


யாழ் மாவட்டத்தில் குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளில் அதிகளவான ரோலர் படகுகளில் தொழிலுக்கு சென்று மீனவர்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களை பிரிதிநிதித்துவபடுத்தியே இன்றைய போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கமையவே ஒரு சில மீனவ சங்கங்களின் ஆதரவுடன் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இந்த போராட்டத்திற்கு எங்களுடைய எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். யாருடைய படகினை தடை செய்ய வேண்டும்? இந்திய மீனவர்களின் படகுகளையா? அல்லது யாழ் மாவட்டத்தில் ரோலர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் படகுகளையோ தடை செய்ய வேண்டுமென கேள்வி எழுப்புகிறோம்.


இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியினால் மீன்பிடி படகு ஒன்று நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து முற்றாக சேதமாக்கப்பட்டது. இது தொடர்பில் குரல் எழுப்பாத பாராளுமன்ற உறுப்பினர் எங்களுடைய மீன்பிடி முறைமையை மாற்ற வேண்டும் அவற்றை தடை செய்ய கோரி போராட்டத்தை மேற்கொள்கின்றார்.


இதற்கு குருநகர் பகுதி மீனவர்கள் ஆகிய நாங்கள் எங்களுடைய கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். இந்தப் போராட்டம் ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரல்.


நாங்கள் கடன்களை வாங்கி, மனைவி பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து தொழிலை மேற்கொண்டு வருகின்றோம். எங்களுடைய வாழ்வாதாரம் தற்போது இல்லாமல் போய்விட்டது. இந்தியன் இழுவை மடிப் படக்கினால் எங்களுடைய கடல் வளம் அழிக்கப்படுகின்றது. இது தரப்பில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்காதவர்கள் இன்று எங்களுக்கெதிராக போராட்டம் மேற்கொள்கின்றனர் என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.