கிளாலி-முகமாலை முன்னகர்வு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 21 மாவீரர்களின் நினைவு நாள்!!

 

11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட 20 மாவீரர்களின் 15ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிகர முறிடிப்புச் சமரில் லெப்.கேணல் துருபதன் உட்பட 20 வரையான போராளிகளும் துணைப்படை வீரர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இம்மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.