வரம் ஒன்று கேட்கிறோம்..!


விழிகளில் வழிகிறது 

கண்ணீர்த் துளிகள்

வழிகளில் நிறைகிறது

 எண்ணிறைந்த வலிகள்


வாழவழியின்றி தவிக்கின்றது

 சில விழிகள்...

வழியிருந்தும் வாழ மறுக்கின்றது

பல விழிகள்


நோயற்ற வாழ்வை

கேட்கவில்லை

நோய்களை தாங்கும்

உடல்வலிமை  கேட்கின்றோம்


வலிகள் இல்லாத வாழ்வை

கேட்கவில்லை

வலிகளை தாங்கும் மனவலிமை கேட்கின்றோம்


வசந்தமாய் ( வசதியாய்)

வாழ  வரம் கேட்கவில்லை

தடைகளை தாண்டிச் செல்ல மன தைரியம் கேட்கின்றோம்


வாழ்வளித்த வள்ளலே

வாழவை இல்லை 

வாழ்வை முடித்துவை...


அருந்தமிழ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.