நெதர்லாந்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபன், கேணல் சங்கர் நினைவேந்தல்!
நெதர்லாந்தில் 26-09-2021 ஞாயிறு தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனதும் கேணல் சங்கரினதும் நினைவு வணக்க நிகழ்வு அல்மேர பிரதேசத்தில் மிகவும் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
சுமார் 17.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடறே;றல், அகவணக்கம், மலர்வணக்கம், ஆகிய ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து எழுச்சிக் கவிதையும் இடம்பெற்றது. இன்றைய கொரோனா சூழ்நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மக்கள் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தினர். முடிவில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற உரிமைக்குரலுடன் இனிதே நிறைவெய்தியது.
கருத்துகள் இல்லை