முகாரி இராகம் கேட்குது!
நேரிய கோட்டில் நடக்கத் தெரிந்தவனுக்கு
சறுக்கி விழுந்தவனெல்லாம்
நடைபழக்க முனைவது
விசித்திரம்தான்!
ஆறடி நிலம்போகும் வரை
அறம் மாறாது
மறத்தின் வழி
நிற்பதே
உரிமைக்கு
உரம்சேர்க்கும்
என்பதை
உணராத சடங்களே
அதிகம்!
நேர்மை பேசுபவனெல்லாம்
முதுகில் குத்திக்கிழிக்கும்
கத்தியோடு
அலையிறான்!
சோரம்போன
சோம்பல் முறிக்க
இடையிடையே
வீரமும் பேசுறான்!
தேசம் தேசியம்
தேசியத்தலைவர்
புராணம் பாடத்தெரிந்த அளவிற்கு
பாடும்தருணம்
தாளப்பிழை இருப்பதை
உணரமறுப்பதும்
அந்த
வரலாற்றுப் புராணத்தின்
வழித்தடங்களை
அழிக்கத்துடிப்பதும்
நாடித்துடிப்பில்
கொழுப்புக் கூடியிருப்பதையே
கோடிட்டுக்காட்டுகிறது!
கூடாத கொழுப்பு
குருதியில்
கலந்தால்
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும்!
இறுதியாக
வெட்டி எறிஞ்சால்த்தான்
இதயம் தப்பும்!
இல்லையெனில்
முகாரி இசைக்கே
வழிசமைக்கும்!!

கருத்துகள் இல்லை