ஆசை மச்சானே- கவிதை!!
போன வழி பாத்திருக்கேன்
ஆசை மச்சானே!!
கண்ணிரண்டும் பூத்திருக்கேன்
ஆசை மச்சானே!!
அலையோடு விளையாடி
கடவோடு உறவாடி
காத்தபடி நானிருக்கேன்
ஆசை மச்சானே....
கீழ் வானம் சிவந்தாச்சு,
கதிரவனும் வந்தாச்சு
கன்னி மனம் காய்ஞ்சிருச்சு
ஆசை மச்சானே...
அயிர மீனை வறுத்தெடுத்தது
பழஞ்சோத்தை குழைச்சு வைத்து
பார்வையில தவமிருக்கேன்
ஆசை மச்சானே.....
சுறாவோடு சூடையும் நீ
கொண்டு வர வேணுமின்னு
சுந்தரமாய் நானிருக்கேன்
ஆசை மச்சானே.....
விழி கொண்டு எரித்தவனே
பகை வென்று சிரித்தவனே
உன் கதை கேட்க காத்திருக்கேன்
ஆசை மச்சானே.....
என் துப்பட்டா தெரிகிறதே
தூரத்தில....
உன் தோள் மேல கிடக்குதையா
ஆசை மச்சானே.....
பாவி மனம் நிறைஞ்சிருச்சு
ஆசை மச்சானே, -- என்
பகல் நேர வெளிச்சம் நீ
ஆசை மச்சானே.....
தமிழரசி.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.

.jpeg
)





கருத்துகள் இல்லை