வாகனம் எமனானதில் குடும்பப்பெண் பலி!!
கிரிந்த புஹுல்வெல்ல பகுதியில் கெப்' ரக வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மதில் சுவரை உடைத்துக் கொண்டு சென்றமையால் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் பலத்த காயங் களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாக திககொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த புஹுல்வெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான அமராவதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியான 24 வயது அவரது மகள் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராப்பிட்டி போதனா வைத் தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மாத்தறை தீவிர சிகிச்சைப் பிரிவிலும், கெப்' வாகனத்தைச் செலுத்தியவர் மாத்தறையில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த குறித்த பெண்ணின் வீட்டின் முன்னுள்ள பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கவிழ்ந்தமையால் அதைத் தூக்கி உதவி
செய் வதற்காகக் குறித்த பெண் தனது மகளுடன் வீதிக்கு சென்ற போதே வேகமாக வந்த கெப்' ரக வாகனம் குறித்த இருவரையும் மோதி முன்னோக்கிச் சென்று மதிலில் மோதி நின்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை