வெகு விரைவில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போர்!!

 


அமெரிக்க விரைவில் சீனாவுடன் போர் தொடுக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump)தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு தற்போது மிக மோசமான நிலையில் இருக்கிறது. இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலையை இரண்டு நாட்டு உறவு எட்டி உள்ளது.

கடந்த 2018ல் சீனாவுடன் அமெரிக்கா  வர்த்தக போரை தொடங்கியது. அமெரிக்க பொருட்களுக்கு குறைவான இறக்குமதி வரியை விதிக்க வேண்டும் என்று அப்போதைய அதிபர் டிரம்ப் (Donald Trump) கோரிக்கை விடுத்தார்.

இதனால் ஏற்பட்ட மோதல் வர்த்தக போரில் முடிந்தது. இந்த வர்த்தக போர் அதன்பின் ஓய்ந்தாலும் தற்போது ஆசிய நாடுகளிடம் சீனாவின் அத்துமீறல் காரணமாக அமெரிக்கா கோபத்தில் உள்ளது. வியட்நாம், தைவான், இந்தியா, தென்சீன கடல் எல்லை நாடுகள் என்று ஒவ்வொரு நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.

ஆசியாவில் சீனாவின் டிராகன் பற்கள் வேகமாக நீண்டு கொண்டே செல்கிறது. ரஷ்யாவும் சீனாவிற்கு ஆதரவு அளிப்பதால் அமெரிக்கா தற்போது சீனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. விரைவில் தைவானில் சீனா மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்து போர் புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஐந்து வருடங்களுக்குள் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையில் முழுதாக போர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த போர் மட்டும் ஏற்பட்டால் அதில் மற்ற நாடுகளும் கலந்து கொண்டு முழுமையான மூன்றாம் உலகப்போருக்கு வழி ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்க விரைவில் சீனாவுடன் போர் தொடுக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump)தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் (Donald Trump)  அளித்துள்ள பேட்டியில்,

அமெரிக்க தற்போது சர்வதேச அளவில் வீக்காக இருக்கிறது. அமெரிக்காவை சீனா மதிக்கவில்லை. அமெரிக்காவை ஒரு வலிமை குறைந்த நாடாகவும், ஊழல் கொண்ட நாடாகவும் சீனா நினைக்கிறது.

அமெரிக்காவில் தேர்தல் முறையாக, நேர்மையாக நடக்கவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்த காரணத்தால் தவறான அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சதி செய்து விட்டனர்.

அமெரிக்காவை வலிமையான நாடாக இனியும் சீனா நினைக்காது. இதன் காரணமாக சீனா வெகு விரைவில் அமெரிக்காவிற்கு எதிராக போர் தொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய ராணுவ ஜெனரல்கள் தாலிபான்களிடம் மொத்தமாக சரண் அடைந்துவிட்டனர்.

இதை உலகமே உற்றுநோக்கியது. நம்முடைய 13 ராணுவ வீரர்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா எந்த பதிலடியும் கொடுக்கவில்லை. அதோடு அமெரிக்க ராணுவத்தின் ஆயுதங்களை ஆப்கானிஸ்தானிலேயே விட்டுவிட்டு வந்துள்ளனர். இந்த ஆயுதங்கள் எல்லாம் அமெரிக்காவின் தனித்துவமான டெக்னலாஜி கொண்டது. விலை உயர்ந்தது.

இதை சீனாவும், ரஷ்யாவும் ஏற்கனவே கைப்பற்றி ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் மீண்டும் உருவாக்க தொடங்கி இருக்கிறோம். இதனால் போர் வந்தால் அவர்களிடம் நம்முடைய தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களும் இருக்கும்.

இரண்டு நாட்டிற்கும் இடையில் வரும் காலங்களில் கண்டிப்பாக இது போரை ஏற்படுத்தும். அமெரிக்கா வலுவான நாடு என்ற பிம்பத்தை இழந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய விதம் தவறானது என்று டிரம்ப் (Donald Trump)  விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் காரணமாக போர் ஏற்படலாம் என்று ஏற்கனவே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணித்து வந்த நிலையில்தான் தற்போது டிரம்பும் (Donald Trump) போர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.