தயிர் கத்திரிக்காய் கிரேவி!!
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
தயிர் - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1-1/2 டீஸ்பூன் *
சோம்பு பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
வரமிளகாய் - 3
எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது தாளிப்பதற்கு...
எண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2 * ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு சேர்த்து கட்டிகள் சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகள் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். * பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அதில் உளுத்தம் பருப்பு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * அடுத்து அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் தயிர் கடலை மாவு கலவை, மசாலாப் பொடிகள் என அனைத்தையும் சேர்த்து ஒருசேர கிளறி விட வேண்டும். * பின்னர் வதக்கி குளிர வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலாவுடன் கத்திரிக்காய் நன்கு ஒன்றுசேரும் வரை கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தயிர் கத்திரிக்காய் கிரேவி தயார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை