கொழும்பு . வெள்ளவத்தை தொடர்மாடி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

 


வெள்ளவத்தைப் பகுதியில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதான மாக இருக்க வேண்டுமென பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் மக்கள் அதிகமுள்ள தொடர்மாடி வீடுகள் ஒவ்வொன்றுக்கும் செல்லும் பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வழங்கி வருகின்றனர்.

வெள்ளவத்தையின் சில தொடர் மாடிகள் உட்பட பல்வேறு இடங் களிலும் இரவு நேரத்தில் திருடர்களின் கை வரிசை அதிகரித் திருப்பதால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இரவு நேரத்தில் வீட்டின் கதவுகள் மற்றும் யன்னல்களைப் பூட்டி விட்டு உறங்குமாறும், சந்தேகத்துக்கிடமான எவரேனும் நடமாடினால் உடனடியாக தமக்குத் தகவல் தருமாறும் பொலிஸார் மக்களிடம் கோரியுள்ளனர். அத்துடன் பொலிஸார் விசேட இரு தொலைபேசி இலக்கங் களையும் மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

தொடர்மாடியில் குடியிருப்போர் தங்களது அயல் வீட்டாரின் பாதுகாப்பு குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். யாராவது நடமாடினால் அனைத்து வீட்டாருக்கும் தகவல் கொடுத்து எச்சரிக்கையை ஏற்படுத்தி விடுவதன் மூலம் திருடர்களின் திட்டத்தை முறியடிக்க முடியும்.

திருடர்கள் ‘எஸ்லோன்’ குழாய் வழியாக மேலே ஏறி குளி யலறை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதோடு பணம், நகைகளைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.