கடலுக்கடியில் தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு!!
ஸ்பெயின் அருகே கடலுக்கடியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸாபியா கடல் பகுதியில் லூயிஸ் லென்ஸ் பார்டோ என்பவரும், அவரது உறவினரும் கடலுக்குள் ஸ்கூஃபா டைவிங் செய்து கொண்டிருந்தனர்.
அதன்போது, கடலுக்குள் மின்னிய பொருளை அருகில் சென்று பார்த்த போது, அவை தங்க நாணயங்கள் என்பது தெரியவந்தது.
அந்த நாணயத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய முகங்கள் பொறிக்கப்பட்டிருந்ததால் அவை ரோமப் பேரரசின் காலத்தில் உள்ளவை என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வுகள் இடம்பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை