12 வயதுச் சிறுமி மின்னல் தாக்கி உயிரிழப்பு!!

 


குருநாகல் - மஹவ பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று சீரற்ற வானிலை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் பன்வெள, பலல்ல பிரேதேசத்தை சேர்ந்த சிறுமியை இவ்வாறு ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் சிறுமி தனது வீடு வளாகத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அவர் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதனையடுத்து எரிகாயங்களுடன் நாகொல்லாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக நாகொல்லாகம வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.       

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.