யாழ் மாநகர மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு


 கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட நிமலதாஸ், கஜிபன் ஆகிய இருவரும் இந்திய எல்லைக்குள் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் நேற்று முன்தினம் மாலை கைது செய்து இரவு நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்கு அழைத்து வந்தனர்.


பின்னர் மீனவர்களை நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 1 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-நிருபர் பிரதீபன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.