அறிந்துகொள்ளவேண்டிய வீட்டுப்பூசைக் குறிப்புகள்!!

 


வலம்புரிச் சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், வலம்புரிச் சங்கை சுத்தமாகவும், தினமும் பூஜித்து வர வேண்டியது அவசியம். வலம்புரிச் சங்கை வாழையிலை அல்லது தட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். வாழையிலை அல்லது தட்டில் பச்சை அரிசி அல்லது நெல் வைத்து அதன் மீது வலம்புரிச் சங்கை, வலம்புரிச் சங்கு வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்து வைக்க வேண்டும். வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்துப் பூஜை செய்வது சிறப்பு. வலம்புரிச் சங்கை வைத்து பூஜை செய்யும் போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்து “பாஞ்ச ஜன்யாய வித்மஹே சங்க ராஜாய தீமஹி தந்தோ சங்கப் பரசோதயாத்” எனும் மந்திரம் சொல்லி வழிபடலாம்.


1. சித்ரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.

2. ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டுப் பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால், நமக்குப் பிரம்மகத்தி தோசம் இருப்பின் போய்விடும். இதையேத் தர்ம சாஸ்திரம். “சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்” என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும், நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.


4. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.

5. வாஸ்து தோசம் உள்ள வீட்டில் துளசித் தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வரத் தோசம் விலகி நலம் உண்டாகும்.

6. செவ்வாய் தோசம் உள்ள பெண்கள் செவ்வாய்தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.

7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம் அர்ச்சனை செய்து வரக் கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். பதினாறு வலம்புரிச் சங்குக் கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தீரும்.

8. சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.

9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.

10. பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் சங்கில் நீர்விட்டு, உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜந்து தோசங்கள் அனைத்தும் விலகும்.

11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்துப் பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப் பஞ்சமே வராது.

12. தினமும் வலம்புரிச் சங்கில் நீர் மற்றும் துளசி போட்டு, அதைத் தினமும் குடித்து வந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.
13. பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை இல்லாத கணவன் மனைவிக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்.

14. பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். 15. உங்கள் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து பூஜித்து வந்தால், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றின் தாக்கம் அண்டாது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.