இந்திய வெளிவிவகார செயலாளர் யாழில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு!!
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா பல்வேறுபட்ட தரப்பினருடன் நேற்றிரவு சந்திப்பில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.
மேலும் இந்த சந்திப்பில்,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், உட்பட அரசியல் பிரமுகர்களும்,கல்வித்துறை சார்ந்தவர்கள்,வர்த்தக துறை பிரதிநிதிகள்,அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை