ஜனாதிபதி மீண்டும் வெளிநாடு பயணம்!!


 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வார இறுதியில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள கொப்-26 மாநாடு அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.

இரசாயன உரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் மற்றும் சேதன இயற்கை பசளைக்கு ஜனாதிபதி வழங்கிய முக்கியத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த விடயங்களில் இலங்கை கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநாட்டிற்கான ஜனாதிபதியின் விஜயம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வாரம் இறுதியில் செல்வார் என்று ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

கொப்-26 மாநாடு பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டின் இலக்குகளை நோக்கிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பன்நாடுகளையும் ஒன்றிணைக்கும் ஓர் மாநாடாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil



Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.