மகாபாரதத்தில் சில துளிகள்!!
உலகிலேயே மிக நீளமான மற்றும் அதிக சுலோகங்களைக் கொண்ட காவியம் ‘மகாபாரதம்’ தான். பண்டைய கிரேக்கக் காவியங்களான ஒடிஸி 12,110 சுலோகங்களளையும், இலியத் 15,693 சுலோகங்களையும் கொண்டிருக்கிறது. இராமாயணம் 24,000 சுலோகங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், மகாபாரதம் 1,00,000 சுலோகங்களைக் கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் சுலோகங்கள் எல்லாம் இரட்டையாக அமைந்துள்ளதால், உண்மையில் மகாபாரதம் 2,00,000 சுலோகங்களைக் கொண்டுள்ளது எனலாம்.
மகாபாரதம் ஒரு இதிகாசம், அதாவது வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட மகாபாரத நிகழ்வுகள் சுமார் 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாரத நிகழ்வுகளை வியாசர் சொல்லச் சொல்லக் கணேசர் இதனை இயற்றி அருளினார் என்பர். கணேசர் அருளிய மகாபாரதம் தொடக்கக் காலத்தில் 8,800 சுலோகங்களைத்தான் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், சில கூடுதலான நிகழ்வுகள் சேர்க்கப்பட்டு 24,000 சுலோகங்கள் ஆனது. சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இது 1,00,000 சுலோகங்களுடம் நிறைவு பெற்றது.
மகாபாரதம் ஆதி பர்வம், சபா பர்வம், வன பர்வம், விராத பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், ஷால்ய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரி பர்வம், சாந்தி பர்வம், அனுஷாசன பர்வம், அஷ்வமேதிக பர்வம், ஆஷ்ரமவாசிக பர்வம், மௌசால பர்வம், மகாபிரஸ்தானிக பர்வம், சுவர்கரோகன பர்வம் என்று 18 பருவங்களைக் கொண்டிருக்கிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை