ரிஷாட் பதியூதீனை தேடிவந்து சந்தித்த தேரர்கள்!!

 


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 174 நாட்களுக்கு பின் பிணையில் விடுதலையான ரிஷாட் பதியூதீனை (Rishad Bathiudeen) பெளத்த தேரர்கள் உட்பட பெருமளவான மக்கள் ஆனந்த கண்ணிரூடன் வரவேற்றுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சுமார் 174 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன்  கடந்த 14ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ரிஷாட் பதியூதீன் (Rishad Bathiudeen) நீண்ட நாட்களுக்கு பின் புத்தளத்திற்கு விஜயம் செய்தார். இதன்போது பதியுதீனை அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும், அரசியல் பிரமுகர்களும் ஆனந்த கண்ணீருடன் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன்போது ரிஷாட் பதியுதீனின் புத்தளம் இல்லத்திற்கு வருகை தந்த குருநாகல் மகநாயக தேரர் அவரின் நலன்கள் குறித்து விசாரித்ததுடன் அவருக்கு ஆசியும் வழங்கிச் சென்றுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.