சஜித், மைத்திரி மற்றும் கரு ஜெயசூரிய சந்திப்பு!!

 


நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் ஆசிரியர் - அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாடு நேற்று (06) அபயராம விகாரையில் இடம்பெற்றுள்ளது.

அபயராம விகாரையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் இதில் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் நடுநிலைக்கு வந்து ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாடு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.