இலங்கை ஜனாதிபதி சிறுவர் தினத்தில் விடுத்த வாழ்த்துச் செய்தி!
அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் எனும் தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
தற்காலத்தில் உலகம் முகங்கொடுத்திருக்கும் கொவிட் தொற்றுப்பரவலுக்கு மத்தியில், அனைத்து சிறுவர் சமுதாயத்தினதும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சிறுவர் உலகத்துக்கான வரையறைகள் அதிகரித்துள்ளது.
அத்துடன் பாடசாலை வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் என்பன இன்னமும் பிள்ளைகளுக்குத் தொலைதூரமாகியுள்ளன. எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அந்த அனைத்து எதிர்பார்ப்புகளையும், மிகவும் பாதுகாப்பாக மீளப்பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் முதல் கடமை என ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொற்றுப் பரவல் நிலைமை காரணமாக சிறுவர் தினத்தை, வீடுகளில் இருந்தவாறே மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு சிறுவர்களை ஆசிர்வதிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan
கருத்துகள் இல்லை