பசி குறியீடு - 65 அவது நிலையில் இலங்கை!!

 


நடப்பு ஆண்டுக்கான 116 நாடுகள் உள்ளடங்கிய உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள நிலையில் அதில் இலங்கை 65 அவது நிலையில் உள்ளது.

முதல் முன்று நிலைகளில் பெலராஸ், போஸ்னியா, பிரேசில் ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த நிலையில் சிலி மற்றும் சீனா நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை 2020ஆம் ஆண்டு 64 ஆவது நிலையில் இருந்த இலங்கை 2021 ஆம் ஆண்டு 65 ஆவது நிலையில் உள்ளது. இதேவேளை இலங்கையின் பட்டினி வீதம் மிதமான நிலையில் காணப்படுகின்றது.

மேலும் இந்தியா கடந்த ஆண்டு 94 ஆவது நிலையில் இருந்து இந்த ஆண்டு 101 ஆவது நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பட்டினி வீதம் தீவிரமான நிலையில் உள்ளது.

மேலும், 2021 ஆம் ஆண்டு 116 நாடுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பட்டினி நிலையில் 6 நாடுகள் தீவிரமானதாகவும், 4 நாடுகள் ஆபத்தான நிலையிலும் 1 நாடு குறைந்தாகவும், 1 நாடு மிதமாகதாக இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.