இலங்கை அணி ஓமானுக்கு எதிரான தொடரை வென்றது!!

 


இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய, ஓமானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், 160 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய இலங்கை அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.