சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் இந்த வார இறுதியில்!!

 


2020 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சற் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் (Z-score cutoff marks) இந்த வாரம் வெளியிடப்படும் என இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி சட் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகளை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ugc.ac.lk இல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் தொடங்கிய மூன்றாவது கொரோனா தாக்கம் காரணமாக உண்டான பல சிக்கல்களினால் சட் ஸ்கோர் வெட்டுப்புள்ளிகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020 ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி விபரங்கள் வெளிடப்பட்டுள்ளன.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.