வவுனியா பிரதேச சபை நுழைவாயில் அறிவிப்பு!!
வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ் எழுத்து மூலமான விளக்கம் கோரியுள்ளதாக அறியமுடிகிறது.
வவுனியா பிரதேச செயலகத்தினுள் சேவை பெற வருவோர் அடையாள அட்டையையும் தடுப்பூசி அட்டையையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதோர் பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என்றும், வவுனியா பிரதேச செயலக நுழைலாயிலில், அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தை, பிரதேச செயலாளரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை