செயலிழக்க உள்ள வாட்ஸ் அப் - இந்த வகை போன்களுக்கு மட்டும்!!

 


உலக மக்களை அனைவராலும் பெரிதும் பயன்படுத்த கூடிய ஒரு செயலி என்றால் அது வாட்ஸ் அப் என்று சொல்லலாம். சராசரி மனிதர்கள் முதல் உலகின் முக்கிய நபர்கள் வரையில் அனைவரும் இதை தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியதாவது,

எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் வாட்ஸ் அப் செயலியானது பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் இரண்டின் பழைய பதிப்புகள் இனி வாட்ஸ்அப் சேவையை ஆதரிக்காது என்று நிறுவனம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் அதிகரிக்கும் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது எந்த வகை போன்களில் எல்லாம் வாட்ஸ் அப் செயலியானது வருகிற நவம்பர் 1 முதல் இயங்காது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி,

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 எஸ்,ஐபோன் 6 எஸ் பிளஸ், ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆகியவையும்.

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் லைட்,கேலக்ஸி SII,கேலக்ஸி ட்ரெண்ட் II ,கேலக்ஸி எஸ் 3 மினி,கேலக்ஸி கோர் ,கேலக்ஸி எக்ஸ் கவர் 2,கேலக்ஸி ஏஸ் 2 ஆகிவையும்.

எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி லூசிட் 2 ,ஆப்டிமஸ் எல் 5 டூயல் ,ஆப்டிமஸ் L4 II டூயல்,ஆப்டிமஸ் F3Q,ஆப்டிமஸ் F7,ஆப்டிமஸ் F5,ஆப்டிமஸ் L3 II Dual,ஆப்டிமஸ் F5,ஆப்டிமஸ் L5,ஆப்டிமஸ் L5 II ஆகிய போன்களில் வாட்ஸ் அப் செயலிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் ios அப்டேட் ஆகியவை இனி கிடைக்காது என்பதால் வாட்ஸ் அப் பயனர்கள் அவர்களது சேவையை தொடர முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.        

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.