புலம்பெயர் சகோதரனால் பெரியளவிலான உதவி வழங்கல்!!

 

 


பத்மினி அம்மன் வீதி, கம்பர் மலை, வல்வெட்டித்துறை என்ற சொந்த முகவரியைக் கொண்ட தற்போது   புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் குணரத்தினம் சுகேந்திரன் (சுதா) என்பவர்  பூநகரி ,கௌதாரிமுனை , பாபநாசம், மண்ணித்தலை ஆகிய இடங்களைச் சேர்ந்த மிகுந்த வறுமையில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு தலா 5000.00 வீதம் எட்டு இலட்சம்  பெறுமதியான  உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். 

இவ் உதவி வழங்கல் நிகழ்வானது கிளிநொச்சியில் உள்ள ராஜராஜேஸ்வரா சிவ ஆலயத்தில் நடைபெற்றது.  கொரோனா பாதிப்பும் மழைச்சூழலுமாக தற்போது பொருளாதார நெருக்கடிகள் மக்களை அழுத்தும் நிலையில் இத்தகைய கொடை மனப்பான்மை கொண்டோரின் உதவியானது மக்களுக்கு மிகத் தேவையான ஒன்றாகும். அந்த வகையில் சுகேந்திரன் அவர்களின் இச்செயல் பாராட்டிற்குரியதாகும்.

    உதவி பெற்றவர்கள் இவரை நன்றியோடு வாழ்த்தி பொதிகளைப் பெற்றுக் கொண்டனர். 
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.