அடர்ந்த கூந்தலுக்கு அற்புத மருந்து கறிவேப்பிலை!!


மக்கள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தலை முடி உதிர்வு. சரியாக பராமரிப்பு இல்லாதது, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்து கொடுக்காமல் இருப்பது போன்றவை தான் அடிப்படை காரணமாக இருக்கிறது.

இதற்காக பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து கூட எளியமுறையில் போக்க முடியும். அதில் கறிவேப்பிலை பெரிதும் உதவுகின்றது. 

தற்போது எப்படி கறிவேப்பிலையை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

  • கைப்பிடி கறிவேப்பிலையை ஒரு கப் தேங்காய் எண்ணெய்யில் நன்கு கொதிக்க வையுங்கள். எண்ணெய் நன்கு கொதித்து கருமையாக மாறும். அப்போதுஅடுப்பை அணைத்துவிடுங்கள். பின் அதை வடிகட்டி வாரம் இரண்டு முறை தலைமுடி வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்யுங்கள். பின் ஷாம்பு கொண்டு தலைக்கு குளித்துவிடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்யுங்கள்.

  • கைப்பிடி கறிவேப்பிலையை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு கப் தயிரில் கலந்து முடியில் தடவுங்கள். பின் ஒரு மணி நேரம் ஊற வைத்து அலசிவிடுங்கள். இவ்வாறு செய்வதால் முடி உதிர்வது மட்டுமன்றி பொடுகுத் தொல்லையும் இருக்காது.

  • கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைத்து அதை முடியில் தடவி ஊற வையுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து தலையை அலசிவிடுங்கள்.

  • சில செம்பருத்தி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.

  • கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் 2 ஸ்பூன் என எடுத்துக்கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். ஆறியதும் வடிகட்டி தலையின் வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடி உதிர்வை தடுக்க சிறந்த வழி

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.