பாழடைந்த கிணற்றிலிருந்து அபாயகரமான பொருட்கள் மீட்பு!!
யாழ்.சாவகச்சேரியில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிணற்றைத் துப்புரவு செய்யும் போதே கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பாழடைந்த கிணற்றில் சந்தேகத்துக்கிடமான கட்டப்பட்ட உரப்பை இருப்பதை துப்பரவு செய்தவர்கள் அவதானித்துள்ளனர். பின்னர் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த பையினுள் ஆறுக்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் சாவகச்சேரி பொலிஸார் அகற்றியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை