ஆயுள் வலி - கவிதை!!
மழை இரவில்
விறைத்துக் கிடந்தது
சுடுகலன் ஏந்திய
அவன் விரல்கள் .....
வலிமை கொண்ட
பாறை மனதில்
பாவையின் நினைவுகள்
அலையாடியபடி...
பொறி பறந்த
அவன் விழிகளுக்குள்
புதுக்கவி வரைந்தவள்
அவள்....
தீயின் சூடும்
தாயின் கனிவும்
ஒன்றாய் கண்டான்
செம் பூவையிடம்....
தேசத்தாகம்
அவனுள் கொதிக்க
சிறுநேசம் வளர்த்தான்
அவளிடம்....
கடமை பாரம்
கனத்துக் கிடக்க
கண்ணில் மட்டும்
காதல் வேலி....
காலக்கூட்டில்
கலைந்தது கனவுகள்,
வேங்கைப் பெண்ணவள்
விதையாய் மாறினாள்.
தூயவளின்
நினைவுகளில்
துடித்தது
தீரன் மனம்,
கனத்த மனதோடு
கடக்கிறது இவன் காலம்,
ஆயுளற்ற காதலின் வலி
ஆயுள் வரை இவனோடு....
கோபிகை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை