வரலாற்றின் ஓர வஞ்சனை அல்லது வீழ்த்தப்பட்டவர்களின் வரலாறு


இன்று புரட்சியாளன்  தோமஸ் சங்கரா   (Thomas Isidore Noël Sankara ) நினைவு தினம்.


'தலைவர் நேர்மையாக/ அறத்துடன் போராடியும் ஏன் அவருக்கு இந்த உலகம் அங்கீகாரத்தை வழங்கவில்லை? ' என்பது நம்மில் பலரின் கேள்வியாக இன்னும் தொடர்கிறது. 


தலைவருக்கு முன்பே தோமஸ் சங்கரா போன்றவர்களுக்கும் இதுதான் நடந்தது. 


உலகின் அனைத்துப் புரட்சியாளர்களும் வரலாற்றில் ஒரு தர வரிசையில் வைத்து நினைவு கொள்ளப்படுவதில்லை. 


நவீன அரச பயங்கரவாதம் அல்லது இன்றைய நவீன உலக ஒழுங்கு தமது வசதிக்கு ஏற்றமாதிரி சிலரை வரலாற்றில் இருந்து மறைத்தும், சிலருக்கு நுட்பமான அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது. 


சோவியத் புரட்சியாளர்களின் பட்டியலோடு மாவோ, கோசிமின், மண்டேலா, கஸ்ட்ரோ, அரபாத் என்று நீளும் பெரும் பட்டியலில் இறுதியில் சே குவேரா வும் இணந்து கொள்கிறார். 


ஆனால் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள்ளான ஒரு பட்டியல் இருக்கிறது.

அது பாட்ரிஸ் லுமும்பா வில் தொடங்கி சமோரா மோசஸ் மார்சல், தோமஸ் சங்கரா என்று நீள்கிறது. 


இவர்கள் வரலாற்றின் இருட்டடிப்புக்குள்ளானதற்கு ஒரே காரணம்தான்.


அதாவது அவர்கள் அரச பயங்கரவாத உலக ஒழுங்கை ஈவிரக்கமின்றி குலைக்க முயன்றதுதான். 


ஏனைய புரட்சியாளர்கள் ஏதோ ஒரு புள்ளியில் இன்றைய அரச பயங்கரவாத உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்மடிந்து போனதால் வரலாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். 


இதுதான் அதன் சூட்சுமம். 


தலைவர் பிரபாகரனும் தமிழீழ விடுதலையினூடாக அரச பயங்கரவாரத் தளைகளிலிருந்து உலகில் அடக்கப்பட்டு ஒடுக்கப்படும் தேசிய இனங்களை விடுவிக்கும் சூட்சுமங்களைத் தன்னகத்தே கொண்டவராக அடையாளம் காணப்பட்டார். 


இதனால் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் வரலாற்றின் ஓர வஞ்சனைக்குள் தள்ளவே இன்றைய உலக ஒழுங்கு பெரும் பிரயத்தனப்படுகிறது. 


அதுதான் இந்தப் பாராமுகம்.

ஆனால் ‘நந்திக்கடல்’ அவரை வரலாற்றின் மையத்தில் இழுத்து நிறுத்தி ஒரு தனித்த நிகழ்வாக அவரை மாற்றியிருக்கிறது. 


இதன் வழி இனி வரப் போகும் நவீன மனித குல வரலாற்றில் அவர் ஒரு தலை சிறந்த புரட்சியாளனாக மட்டுமல்ல ஒரு கோட்பாட்டாளனாகவும் கொண்டாடப்படுவார். 


- மீள் பதிவு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.