ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் இலங்கை வருகை!!


 அடிமைத்துவத்தின் சமகால போக்குகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை பற்றிய அறிக்கையிடலுக்காக நவம்பர் மாத இறுதியில் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் குறித்த விஜயத்திற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுவருவதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மனித கடத்தல் தொடர்பான வடக்கு அயர்லாந்து சட்டசபை குழு, போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு என்பனவற்றில் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.