மன்னாரில் இராணுவத்தினர் தீவிர வீதி சோதனை!

 


மன்னாரில் இராணுவத்தினர்  திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

29,09,2021 (புதன் கிழமை) முதல் மன்னார் பஜார் பகுதி மற்றும் மன்னார் மேல் நீதிமன்ற பிரதான வீதி ஆகிய பகுதிகளில்  இராணுவத்தினர் மக்களை சோதனை செய்து வருகின்றனர்.

குறித்த சோதனை நடவடிக்கையை  இன்றும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக குறித்த வீதிகள் ஊடாக  செல்லும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிப்பவர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் உடமைகளை சோதனை செய்யப்படுவதோடு, வாகனங்களும் சோதனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.