அம்மா பாசம் இல்லை அப்பா அரவணைப்பு இல்லை சோகம் நிறைந்த நதியா சங் வாழ்க்கை!

 


விஜய் டிவியிக் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், இன்று நாடியா சங் தனது கதையை சொல்ல தொடங்கினார். மலேசியாவை சேர்ந்த அவர் தனது அம்மா படுத்திய கொடுமைகள், அவரை எதிர்த்து கணவர் தன்னை கூட்டிச்சென்று திருமணம் செய்து கொண்டது பற்றி அவர் பேசி உள்ளார்.

“என் பெயர் நாடியா சேங். அது எனது ஹஸ்பண்ட் சைனீஸ் கல்யாணத்துக்கு அப்புறம் வந்த பெயர். இது எனக்கு ரொம்ப ராசியான பெயர்னு சொல்லாம். எனக்கு அப்பா அம்மா வைத்த பேர் அருஜெயலட்சுமி. அப்பா பெயர் அர்ஜுனன், அதில் இருந்து அரு மற்றும் அம்மா பெயரில் இருந்து ஜெயா எடுத்து வச்சாங்க. எங்க அக்கா, நான், என் தங்கச்சி – மூன்று பேர் தான் முதல் மூன்று பொம்பள பிள்ளைங்க எங்க ஃபேமிலியில்.

எங்களுக்கு ஒரு ஒரு வருஷம் தான் வயசு வித்யாசம். எந்த ஒரு வகையான வசதியையும் பார்க்காம தான் வளர்ந்தோம். ஒரு பதினேழு பதினெட்டு வயசு வரைக்கும், என் ஹன்பண்ட் பார்க்குற வரைக்கும் நான் வேலை பாக்குற வரைக்கும், ஒரு கட்டில் மெத்தையில் படுத்தது கிடையாது, ஒரு முழு வீட்டில் இருந்ததே கிடையாது, ஒரு ரூம் போல தான் எப்போதுமே இருக்கும்.

அப்ப கூட அப்பா தண்ணி போடுவாங்க. அதனால சொந்தக்காரங்க யாரும் எங்களை மதிக்க மாட்டாங்க. அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். இப்போ அந்த மாதிரி ஒரு அம்மா குழந்தையை அடிச்சாங்கனா குழந்தைகள் வதை தடுப்பு சட்டத்தில் போகும். 14 வயசுலயே வீட்டை விட்டு பலமுறை ஓடிப்போய்ருக்கோம் நான் அக்கா தங்கச்சி எல்லாம் அம்மாகிட்ட அடி தாங்க முடியாம. என்னைக்கு அம்மாமேல ஒரு வெறுப்பு வந்துச்சு அப்படீனா போலிஸ்கிட்ட அடிவாங்க வச்சாங்க. எங்களுக்கு அப்பும் வந்த தம்பி தங்கச்சிங்களுக்கு கொடுத்த சுதந்திரம் எங்களுக்கு கொடுக்கல.

நான் 15 வயதிலே ஹேட்டல்ல ஹவுஸ் கீப்பிங்கா வேலை செய்தேன். அப்போ அங்க என்ன பார்த்தவதான் சேங். எனகூட வேலை பார்த்த ஒரு அக்காவிட்ட நம்பர் வாங்கி எனக்கு போன் பண்ணாரு. அப்போ நீங்க வேலைக்கு போகும்போது உங்க அம்மாகிட்ட அடிவாங்கும்போது பார்த்திருக்கேன். அப்போ உங்கள எனக்கு பிடிச்சிருக்குனு சொன்னாறு. அப்போ நான் புடிச்சிருந்தா அம்மாகிட்ட வந்து பேசுங்கனு சொன்ன.

அப்புறம் எங்க அம்மா பார்த்து பேசுனாங்க. முதல்முறையாக எங்க அம்மா அடங்கி உட்கார்ந்த்து என் ஹஸ்பண்ட்-க்குதான். உங்க மகள எனக்கு புடிச்சிருக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிறேனு சொன்னாரு. அவர் பேசுன அன்னக்கே வீட்ல தீபாவளி நடந்துச்சு. அடுத்த நாளே என் ஹஸ்பெண்ட் என்ன வீட்ல இருந்து கூட்டிக்கிட்டு போய்ட்டாரு.. அதுக்கப்புறம் ஒரு வார்த்த்தை சொன்னாரு. எனக்கு படிப்பு இல்லனு நிறைபேர் விட்டுட்டு போய்ட்டாங்க.. உனக்கும் என்ன விட்டு போகனும்னு தோனுச்சினா தயவு செய்து படிப்பை மட்டும் காரணம் சொல்லாதனு சொன்னாரு அதற்கு உன்கூட வரும்போன நீ என்ன வேலை செய்றனு எனக்கு தெரியாது எனக்கு பாதுகாப்பா இருப்பேனுதான் என்கூட வந்தேன். கடைசிவரைக்கு உன்ன விட்டு போகமாட்டேனு சொன்னேன்.

எங்க அம்மா எவ்ளவோ சாபம் விட்டாங்க… அதுக்கப்புறம் கிடைத்த வேலை எல்லாம் செஞ்சேன். அப்போதான் தெரிஞ்சர் ஒருவர்த்தர் ஒரு வெள்ளைகார ஆபீஸ்ல வேலை வாங்கி கொடுத்தாரும். முதல் சம்பளம் வாங்கின உடனே நாம வச்சதுதான் சட்டம் என்று நினைத்தேன். அப்புறம் எனக்கு புடிச்சத செய்ய தொடங்கிகேன். இப்போ இங்க வருந்து இருக்கேன். இதுக்கு முழு காரணம் என் ஹஸ்பெண்ட்தான். நான் செய்யுர ஒவ்வொரு விஷயமும் எங்க அம்மாவ பழிவாங்கனும்னு செய்யல அவங்களுக்கு பெருமைதான் சேர்த்திருக்கேன்.

சின்ன வயசுல இருந்து அம்மாவோட பாசம் அப்பாவோட அரவணைப்பு கிடைக்காததால்தான் எனக்கு இப்படி ஒரு ஹஸ்பெண்ட் குழந்தைகள் கிடைச்சிருக்காக.. இந்த உலகத்தில் என் உயிர் போகும் சூழ்நிலை ஒருவானால் அது என் ஹஸ்பெண்ட் இல்லாத நாளாகதான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.