பாவனி அழறத நிறுத்தி சிரிக்க வச்சுட்டாக

 


ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் 3ம் தேதி தொடங்கியது முதல் ஒவ்வொரு நாளும் புரமோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேல் பலரும் புதுமுகங்கள். அதனால், அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்வையாளர்களுக்கு எந்த முன் அபிப்பிராயமும் இருக்காது. அதனால், இந்த சீசன் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

அதே போல, ஏற்கெனவே, பிரபலமாக உள்ள தொகுப்பாளினி பிரியங்கா, பாடகி சின்ன பொண்ணு, நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளதால் அங்கே நடக்கும் போட்டிகளில் அவர்கள் ஏற்கெனவே தங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் அந்த இமேஜை தக்கவைத்துக்கொள்வார்களா என்பது போகப் போகத்தான் தெரியும். இதற்கு முந்தைய சீசனில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும் தங்கள் இமேஜை இழந்து நெட்டிசன்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில்தான், விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கும்போது எல்லோரையு சிரிக்க வைப்பார். தன்னை யார் கலாய்த்தாலும் ரொம்ப ஜாலியாக எடுத்துக்கொள்வார். மற்றவர்களை நகைச்சுவையாக பேசி சிரிக்கை வைப்பார். இவருடைய இந்த குணம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன பிறகு, மாறிவிடுமோ என்று அவருடைய ரசிகர்கள் சிறிது பயத்தில் இருந்த நிலையில் பிரியங்கா நான் எங்கே போனாலும் என்னுடைய அந்த நல்ல குணத்தை மாத்திக்க மாட்டேன் என்று சொல்லும் விதமாக இன்று ஒரு பிக் பாஸ் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பிரபல சீரியல் நடிகை பாவனி ரெட்டி, ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழ் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார்.இதையடுத்து, பாவனி ரெட்டி தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, சின்னத்தம்பி, சன் டிவியில், பாசமலர், ராசாத்தி உள்ளிட்ட சீரியல்களிள் நடித்துள்ளார்.

பாவனி ரெட்டி இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். நேற்று இவர், தனது கணவர் இறந்ததை மற்றொரு போட்டியாளர் இசைவாணியிடம் கூறி வருத்தப்பட்டார். இதைக் கேட்டு ரசிகர்கள் பலரும் பாவனி ரெட்டி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா என்று வருத்தம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்றும் பாவனி ரெட்டி தனது வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள 4-5 வருஷம் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு ஒரு பெரியா ஹீரோயின் ஆகணும் அப்படிங்கற ஆசை எல்லாம் எதுவுமே இல்லை. இப்போது வரைக்கும் reviving ஆக இருக்க வேண்டும் அவ்வளவுதான் என்பதை கண்ணீருடன் சொல்கிறார்.

பாவனி ரெட்டி அழுதுகொண்டு பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த பிரியங்கா அருகே வந்து எதுக்கு நீஞ்க அழுதுட்டு இருந்தீங்க… நான் பார்தேன் நீங்க அழறதை… என்ன பசிக்குதா என்று கேட்டு சூழலை நகைச்சுவையாக மாற்றுகிறார். அதற்கு பாவனி ரெட்டி எனக்கு ஆந்திரா சாப்பாடு வேணும் என்கிறார். அதற்கு பிரியங்கா, ஆந்திர சாப்பாடா… அண்ணாச்சி காரம்ணு ஏதோ ஒன்னு எழுதி வச்சிருக்கார் இல்லையா, கேவலமா ஏதோ ஒன்னு. நாக்கை டைரக்ட்டா உள்ள விடு நக்கி நக்கி பாரு, ஆந்திரா சாப்பாட்டை இதுக்கு அப்புறம் சாப்பிடவே கூடாதுங்கற ஒரு முடிவுக்கு வருவ…” என்று சொல்லி பாவனி ரெட்டியை சிரிக்க வைக்கிறார்.

அழுதுகொண்டிருந்த பாவனி ரெட்டியை சிரிக்க வைத்த பிரியங்காவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து ஒரு நெட்டிசன், “பிரியங்கா அக்கா சூப்பர் பாவனி அழுவுறத நிறுத்தி அவங்கள சிரிக்க வச்சுட்டாக… பிரியங்கா அக்கா நல்ல என்டேர்டைன்னர்” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.

மற்றொரு நெட்டிசன், “பிரியங்கா தன் பெயரை கெடுத்து விட மாட்டார்கள் இது நிச்சயம்…….. She knows how to handle situations” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல ரசிகர் ஒருவர் குறிப்பிடுகையில், பாவனி ரெட்டியை சிரிக்க வைத்ததால், “இப்படியே இருங்க பிரியங்கா…. டைட்டில் வின்னராக வாய்ப்பு அதிகம் இருக்கு…” என்று பிரியங்காவை பலரும் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.