வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு அஞ்சலி!
தமிழீழ மாவீரர் தினமான இன்று (27) வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் பொது வெளியொன்றில் அஞ்சலி செலுத்துவதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் செயற்பாட்டின் ஓரங்கமாக தீருவில் வெளியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்று மாலை மாவீரர்களின் பெற்றோரும் உரித்துடையோரும் ஏனைய பொதுமக்களும் அங்கு திரண்டு மாவீரர்களுக்கு நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வேலன் சுவாமிகள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பலரும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை